பக்கம்:மேனகா 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பிடும் கள்ளன்

87

வெளியிடப் பின் வாங்குகிறார்கள். ஆகையால், ஒரு காரியம் செய்தால் நலமாயிருக்கும்; ஆனால் அது என் மனதிற்குப் பிடிக்கவில்லை. அவரை வேலையிலிருந்து மறு உத்தரவு வரையில் நீக்கி(சஸ்பெண்டு செய்து) வைத்தால், யாவரும் உண்மையைச் சொல்லுவார்கள், லஞ்சம் வாங்கின கேஸ் களெல்லாம் பிறகு வெளியாகும்- என்றார்.

துரை :- இருக்கட்டும்; அதைப்பற்றி நான் நன்றாக யோசனை செய்து மேலே எழுதி அவரை நீக்கி வைக்கிறேன் என்றார்.

அதற்குள் சலாம் செய்து டபேதார் உள்ளே வந்து ஒரு கடிதத்தைப் பெரிய கலெக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிப் பார்த்தார்.

அது டிப்டி கலெக்டரிடமிருந்து வந்திருந்தது; அதைப் பிரித்து அடியில் வருமாறு படித்தார்.

“ஐயா!

சென்னைக்கு நான்மிக்க அவசரமான சொந்த விஷயத்தின் பொருட்டு போகவேண்டியிருப்பதால், எனக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரஜாக் கொடுக்கக் கோருகிறேன்.”

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்தவுடன் துரை தாசில்தாரின் முகத்தைப் பார்த்தார். அவர் புன்னகை செய்து, “சென்னைக்கு இராத்திரி 7-மணிக்கல்லவா ரயில் புறப்படுகிறது. அவர் இப்போது வந்து விட்டுப் போவதற்குத் தடை யென்ன?” என்று கூறி எரிகின்ற கட்டையைத் தட்டி விட்டார்.

துரை:- டபேதார்! இதை யார் கொண்டு வந்தவர்?

டபே:- டிப்டி கலெக்டருடைய மைத்துனர் கிட்டையர் என்றான். உடனே துரை வேறொரு காகிதத்தை எடுத்து அதில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/105&oldid=1249194" இலிருந்து மீள்விக்கப்பட்டது