பக்கம்:மேனகா 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மேனகா

“ரஜாக் கொடுக்கப்படமாட்டாது” என்று எழுதி மடித்து ஒரு உறையில் போட்டு ஒட்டி டபேதாரிடம் கொடுக்க, அவன் அதை வாங்கி வெளியிற் சென்றான்.

துரை:- அவ்வளவு அவசரமான காரியம் என்ன விருக்கும்?

தாசில்:- என்ன சூதோ தெரிய வில்லை. ஏதாயினும் லாபத்தை உத்தேசித்ததாகவே யிருக்கும். எல்லாவற்றிற்கும் நான்தந்தி ஆபீஸுக்குப் போய் டிப்டி கலெக்டருக்கு ஏதாயினும் தந்தி வந்ததா வென்று கேட்டு உண்மையை அறிந்து கொண்டு அவருடைய வீட்டிற்கே போய் தந்திரமாக விஷயத்தை அறிந்து கொண்டு வருகிறேன்- என்றார்.

துரை:- சரி; அப்படியே செய்யும் - என்றார்.

உடனே தாந்தோனிராயர் குனிந்து சலாம் செய்துவிட்டு தந்தி ஆபீசுக்குப் புறப்பட்டார்.


❊ ❊ ❊ ❊ ❊


9-வது அதிகாரம்


காணாமற் போனாயோ கண்மணியே?


மே
னகா காணாமற் போனதைப் பற்றித் தமக்குக் கிடைத்த தந்தியைப் படித்த சாம்பசிவமும், அவருடைய தாயும், மனைவியும் பெருத்த திகைப்பையும், அச்சத்தையும், கவலையும் கொண்டனர். எதிர்பாராத வகையில் கோடை காலத்தில் உண்டாகும் பேரிடியைப்போலத் தோன்றிய அந்த விபத்தை அவர்கள் எதிர்பார்த்தவரல்லர். ஒரு வருஷகாலம் துயர்கடலில் ஆழ்ந்து வருந்திக் கிடந்த தமக்கும், தமது அருமைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/106&oldid=1252364" இலிருந்து மீள்விக்கப்பட்டது