பக்கம்:மேனகா 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

193

பித்தனைப் போலப் பிதற்றிக் கொண்டு நுழைந்த தெருக்களிலேயே திரும்பத் திரும்பச் சென்றவனாக நடந்தான். அவனுக்கு ஆகாரமின்மையால் கண்கள் இருண்டன. களைப்பு மூட்டியது, ஆத்திரம் ஒன்றே தணியாமல் அவனை அங்கும் இங்கும் கட்டி இழுத்தது. சூரியனைப்பார்த்த கண்ணுக்கு உலகமெங்கும் கோடானு கோடி சூரியர்களே தோன்றுதலைப்போல, அவனுக்கு உலகத்திய பெண்பாலர் யாவருமே விபச்சாரிகளாய்த் தோன்றினர். அந்த வகுப்பாரே தனக்குப் பெரும் பகைவரென மதித்தான். எதிரில் அவனது கண்ணில் பட்ட ஒவ்வொரு மாதரின் வதனத்திலும் ஒவ்வொரு கள்ள நாயகன் ஒளிந்துகொண்டிருந்ததை வராகசாமி மாத்திரமே கண்டான். நல்ல யெளவனப் பெண்டீர் தமது வீட்டின் வாயிலில் நின்றால், மனிதர் பிளேக் வியாதி கண்ட வீட்டிற்கு நெடுந் தூரத்திற்கு அப்பாற் செல்வதைப் போல, எதிர் வீட்டின் பக்கமாகவும், அவர்களைப் பாராமலும் நடந்தான். அப்போது தெருவிலேயே அவனுக்கு எதிரில் எவராயினும் பெண்டீர் வந்துவிட்டால், அவன் வந்தவழியாகவே திரும்பிச் சென்று வேறொரு தெருவிற்குப் போனான். அங்கு சென்றால் அவ்விடத்தில் வேறொரு மாது ஹார்மோனியம் வாசித்து குயிலைப் போலப் பாடிக் கொண்டிருக்கக் கண்டான். “சே! பீடைகளா! எங்கே போனாலும் கழுத்தை அறுக்கிறீர்களா? சங்கீதம் என்ன வேண்டியிருக்கிறது மானங்கெட்ட ஜென்மமே! நாடகத்திற்குத் தயாராகிறாயோ! மேனகாவுக்கு மாயாண்டிப் பிள்ளை அகப்பட்டான். உனக்கொரு பேயாண்டிப்பிள்ளை அகப்படுவான்; சித்தமாக இரு; நடக்கட்டும்; நான் இந்த ஹார்மோனிய ஓசையைக் கேட்டதே பாவம்” என்று நினைத்து, செவிகளில் கையை வைத்து மூடிக்கொண்டு அடுத்த இன்னொரு பெருத்த தெருவில் நுழைந்து அரைப்பாகம் சென்றான். அவ்விடத்தில் பெண்களின் ஹைஸ்கூல் இருக்கிறது என்பதை மறந்து அவ்விடத்திற்குப் போய் விட்டான். அவன் நெடுந்துரத்தில் வந்தபோதே, பள்ளிக்கூடம் விடுவதற்கு மணியடிக்கப்பட்டது; அவன் அந்த வாயிலுக்கு வந்தபோது

மே.கா.I–14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/211&oldid=1250987" இலிருந்து மீள்விக்கப்பட்டது