பக்கம்:மேனகா 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

மேனகா

தோன்றியது. மூலையில் படுத்திருந்த வராகசாமிக்கோ கண்ணிற்படும் பெண்பாலர் யாவரும் மேனகாக்களாகவும், புருஷர் யாவரும் மாயாண்டிப் பிள்ளைகளாகவும் தோன்றினர். ஜனங்கள் இருந்த பக்கங்களைப் பார்த்தாலே அவனுக்குத் தலைநோவாய் இருந்தது. கடற்பக்கம் தனது பார்வையைச் செலுத்தினான். கடல் மகா கோபத்துடன் அலைகளை வெளியில் தள்ளி விடுதலையும், அலைகள் வெட்கமின்றித் திரும்பித் திரும்பிக் கடலிற்போய்ச் சேருதலையும் கவனித்தான். தாய்மார் குழந்தைகளிடத்தில் மனம் நிறைந்த அன்பையும் ஆசையையும் கொண்டிருந்தும், விரைவில் எழுந்து மறையும் முன்கோபத்தால் குழந்தைகளை அடித்து அப்பால் தள்ளுதல் போலவும், அக் குழந்தைகள் அழுதுகொண்டே ஓடிப்பேர்ய் தமது தாயிடமே சலுகை சொல்லிக்கொள்ளுதல் போலவும், விழுந்ததனால் தம்மீது படிந்த மண்ணோடு தாயை அணைத்துக்கொள்வது போலவும் இருந்தன. “ஆம்! ஆம்! நான் எவ்வளவு வைதாலும், அடித்தாலும் என்னை விடமாட்டே னென்று கட்டிக் கொண்டாள் அல்லவா! அலைகளே! அவள் இரகசியத்தில் செய்ததை வெளியில் காட்டி என்னை அவமானப் படுத்துகிறீர்களோ! செய்யுங்கள் செய்யுங்கள் எனக்குப் புத்தி வந்தது. இனிமேல் நான் அவளை மாத்திரமல்ல; மனிதப் புழுக்களையே என்றைக்கும் நம்பேன். வஞ்சகமும் விபசாரமுமே நிறைந்த மனித சமூகத்திலிருந்து வாழ்தலிலும் நிருமாநுனுஷ்யமான காட்டிற்குச் சென்று, இந்த ஆசையெல்லாம் ஈசன்மீது திருப்புவேனாகினால், என் ஜென்மம் ஈடேறிப்போகும், இனி நான் வீட்டுக்கே திரும்புவதில்லை; அக்காள் முதலியோர் வதைப்பதும் போதும்; நண்பர்களும் அண்டை அயலாரும் பழிப்பதும் போதும். நாளைக்கு இந்த தட்டுவாணி, நாடகத்தில் வேஷம்போட்டு ஆடவும் தொடங்குவாள். அந்த மேன்மையையும் அடைந்து நான் உயிர் வாழவேண்டுமா? சே! இந்த நாட்டிலும் இருத்தல் தகாது! காசிக்குப் போய் சந்நியாசம் வாங்கிக்கொண்டு எவர் முகத்திலும் விழிக்காமல் இமய மலைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/222&oldid=1250866" இலிருந்து மீள்விக்கப்பட்டது