பக்கம்:மேனகா 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

மேனகா

ஈசனை அடைய விரும்புவோர் வழிதவறி, சைவமென்றும், வைணவ மென்றும், தென்கலை யென்றும், வடகலையென்றும், இந்து வென்றும், முகம்மதிய றென்றும் இன்னம் வேறு பலவிதமாயுள்ள வேறுபாடுகளான இடையூறுகளிலும், குறுகிய கொள்கைகளிலும் அகப்பட்டுக் கொண்டு நெடுந்தூரம் செல்ல மாட்டாமல் இறந்து பிறந்து வாசல்படியிலேயே தத்தளிப்பதைப்போல இருந்தது. அந்த மணல் பரப்பிற்கு அருகில் சென்ற பாதையின் இரண்டு திக்குகளிலும் கண்காணுந்துரம் வரையில் நிறுத்தப்பட்டிருந்த கம்பங்களும், அவற்றில் அழகாய் விளங்கிய மின்சார விளக்குகளும் உலகந்தோன்றிய முதல், அப்போதைக் கப்போது அவதரித்து மற்ற மனிதரிலும் அறிவால் உயர்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாய் எப்போதும் அழிவின்றி நிற்கும் ஆழ்வார்களும், நாயன்மார்களும், நபீக்களும், ஏனைய மகான்களும் சாதாரண ஜனங்களால் கண்டுபிடிப்பதற்கு ஏலாத கடவுளைக்கண்ட தமது ஞான மாகிய துரதிருஷ்டிக் கண்ணாடியை முகத்தில் அணிந்து நிற்பதைப் போல இருந்தன. நெடுந்துரத்திற்கு அப்பாலிருந்த ஹை கோர்ட்டின் மீது ஆகாயத்தை அளாவிய கம்பத்தின் உச்சியில் இருந்த திசை காட்டும் விளக்கு மாறிமாறி பிரகாசமாகவும், மங்கியும் தோன்றியது வராகசாமிக்கு எவ்வாறு இருந்தது? ஜோதி ஸ்வரூபமான பரம்பொருள், மாயையென்னும் போர்வையால் மறைந்தும் தோன்றியும் காணப்பட்டு, பிறவிக்கடலைக் கடப்போருக்கு, “இதோ இருக்கிறேன், இதோ இருக்கிறேன்; என்னை எங்கெங்கோ தேடுகிறீர்களே, பூலோகத்திய உயர்ந்த நியாய ஸ்தலத்துக்கு மேலல்லவோ நான் இருக்கிறேன், வாருங்கள்” என்று கைகாட்டி அழைப்பது போலிருந்தது. கடற் கரையோரத்தில் ஏராளமாகக் கிடந்த கட்டுமரக்கட்டைகள், பாவக்கடலை முற்றிலும் கடந்து அக்கரை சென்று கடவுளை அடையும் வல்லமைபெற்ற பொய்யான சமய நூல்களைப் - போல எண்ணிக்கை யற்றுக் கிடந்தன. ஏராளமான அந்தக் கட்டைகள் செம்படவர், கடலில் சிறிதுதுரம் சென்று அதிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/224&oldid=1250871" இலிருந்து மீள்விக்கப்பட்டது