பக்கம்:மேனகா 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

207

நீர் வாழைக் காய்களையும், புடலங்காய்களையும் கொய்து பிறருக்கு விற்றுப் பொருள் தேடுதற்குப் பயன்படுதல்போல சமய நூல்கள் கோயிற் பூனை தெய்வத்திற்கு அஞ்சாதென்ன, நம் பாகவதர்களும், ஆசான்களும் பிரசங்கித்து, தம் வயிற்றை நிரப்புதற்கு உபயோகப்படுதல் நினைப்பூட்டப் பட்டது. கடல்முகமாய் நீட்டி வைக்கப் பட்டிருந்த கட்டைகள் ஈசனை அடைய உபயோகப்படும் தோணிகளோ அன்றி, மனிதரைத் தடுத்துப் போர்புரியும் பொருட்டு கோட்டை மதிலின் மீது அணிவகுக்கப்பட்ட பீரங்கிகளோ வென்று ஐயுறும் வண்ணம் காணப்பட்டன.

இவ்வாறு வராகசாமியின் மனதில் விரக்திப் பெருக்கால் விபரீதமான எண்ணங்களும் தோற்றங்களும் உதித்தன. தான் உடனே எழுந்துபோய் ரயிலில் ஏறி காசிக்குப் போவதே முடிவென்று தீர்மானித்துக் கொண்டான், தனது சட்டைப் பையிலிருந்த சிறிய பணப்பையை எடுத்து ஆராய்ந்தான். அதில் ஐந்து, பத்து நோட்டுகளும் சில்லரைகளும் இருந்தன. உற்காசகத்தோடு எழுந்து மணல் பரப்பில் நடந்தான். சோர்வும் களைப்பும் மேலிட்டு அவனைக் கீழே தள்ளப் பார்த்தன. கண்கள் இருண்டன. சிறிது நேரம் நின்று, தன் மனோவுறுதி யால் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு மேலும் நடந்து பாதையை அடைந்தான். மோட்டார் வண்டிகளும், சாரட்டுகளும் போவதும் வருவதுமாய் இருந்தன. மனிதர் பலர் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தனர். வராகசாமியின் தோற்றமோ மிக்க பரிதாபமாக இருந்தது. தனது அலங்கோல நிலைமையைக் கண்டு ஜனங்கள் ஏதாயினும் நினைத்துக் கொள்வார்களோ வென்பதையும் மறந்து பாட்டைப் பக்கம் விரைவாக நடந்து சிறிது நேரத்தில் சென்னை துரைத்தனத்தாரின் கலாசாலைக்கருகில் வந்தான். அவனது நோக்கம் எதிரில் வந்த வண்டிகளிற் சென்றது. அப்போது நெடுந்துரத்திற் கப்பால் மெல்ல வந்த ஒரு மோட்டார் வண்டியைக் கண்டான். அதிலிருந்த மனிதரை அசட்டையாகப் பார்த்தான். அதில் மூவர் இருக்கக் கண்டான். முன்புறத்தில் இருந்த ஒரு மகம்மதியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/225&oldid=1250875" இலிருந்து மீள்விக்கப்பட்டது