பக்கம்:மேனகா 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

மேனகா

அதை ஒட்டினான். உட்புறத்தில் ஒருவர் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரு திரையால் தம்மை மறைத்துக்கொண்டும், முகத்தில் ஒரு முகமூடி அணிந்து கொண்டும் இருந்தனர். அவர் ஆணோ பெண்ணோ என்பது தோன்றாதவாறு உறை நன்றாக மூடிக்கொண்டிருந்தது. இன்னொருவர் யார் என்பதை அவனுடைய கண் ஆராய்ந்தது. அவள் அழகு பொருந்திய ஒரு யெளவனப் பெண்மணி; வெல்லெட்டு திண்டுகள் தலையணைகள் முதலிய வற்றினிடையில் அவள் சாய்ந்திருந்தாள். வாடிக்கிடக்கும் ரோஜா புஷ்பத்தைப்போல அவளது தோற்றம் நோய்கொண்டதோற்றமாக இருந்தது.தூரப் பார்வைக்கே அவளுடைய முகம், அவனுக்கு அறிமுகமானதாய்த் தோன்றியது. வந்தவள் மேனகா வென்னும் நினைவு அவன் மனதில் உண்டாயிற்று. வண்டி அருகில் நெருங்க, நெருங்க, அவனுடைய ஆச்சரியமும், கோபமும் அதிகரித்துக்கொண்டே வந்தன. அவன் தனது கண்களை நம்பாமல் மயங்கி உற்று நோக்கினான்; வண்டி அருகில் வந்து விட்டது. தனது கண்களை மூடிக்கொண்டு திண்டுகளில் சாய்ந்திருந்தவள் தன் மனைவியான மேனகாதான் என்பதை நிச்சயமாகக் கண்டான். திரையால் மூடிக் கொண்டிருந்தது மாயாண்டிப்பிள்ளை யென்றும், அவனும் மேனகாவும் கடற்காற்று வாங்க உல்லாசமாக வந்திருப்ப தாகவும், அவ்வளவு சொகுசாக திண்டுகளில் சாய்ந்து வந்தவள் தன்னைக் கண்டே அவ்வாறு கண்களை மூடிப் பாசாங்கு செய்வதாயும் நினைத்தான். அவனுக்கு உடனே அடங்காக் கோபமும், பதைபதைப்பும் உண்டாயின. தான் அவளது முகத்திலேயே இனி விழித்தல் கூடாதென நினைத்து ஊரைவிட்டு ஒடிப்போக நினைத்துப் போகும் போதும் அவள் கள்ளப்புருஷனோடு சோதனையாக எதிர்ப்பட்டது தனக்கு அபசகுணமாகவும், தான் எங்கு சென்றாலும் அவள் தனது கண்ணில் பட்டுக்கொண்டுதான் இருப்பாள் என்றும் அவன் மனதில் ஒரு எண்ணம் உண்டாயிற்று. அவள் உயிரோடு இருக்கும் வரையில் தனக்கு அவமானமும், கோபமும், துயரமும் இருந்துகொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/226&oldid=1250877" இலிருந்து மீள்விக்கப்பட்டது