பக்கம்:மேனகா 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




15-வது அதிகாரம்

கண்டதும் பொய் விண்டதும் பொய்

த்தாவது அதிகாரத்தின் முடிவில், நைனாமுகம்மது மரக்காயன், கட்டிலின் மீது படுத்திருந்த பெண்மணியை மேனகா வென்று நினைத்து அவளைப் புகழ்ந்தும் தனது மனைவியைத் தூற்றியும் அருகில் நெருங்கி அவளது முகத்தை வலுவாகத் திருப்ப, தன் மனைவி நூர்ஜஹானே அவ்விதம் படுத்திருந்தவள் என்று அறிந்து திடுக்கிட்டு அச்சங்கொண்டு மயங்கி வீழ்ந்து விட்டான் என்பது சொல்லப்பட்டதல்லவா.

நூர்ஜஹான் என்ற பெண்ணரசியின் அப்போதைய மனோ நிலைமையை உள்ளவிதம் அறிந்து கூற யாரே வல்லவர் மனிதர் முதல் விலங்கு பறவை புழு முதலிய இழிந்த ஜெந்துக்கள் வரையிலுள்ள ஆன்மாக்கள் எல்லாம் எதைப் பொறுக்கினும் பொறுக்கும், ஆனால் அதனதன் ஜோடி அதன் கண்முன்னாகவே இன்னொன்றுடன் விபச்சாரம் செய்வதை மாத்திரம் பொறுத்துச் சும்மாவிருக்க இயலாத காரியமல்லவா? அதனால் உண்டாகும் கோபமும், பகைமையும், மூர்க்கமும் அளவிறந்தனவாகும்; உடனே குத்து, வெட்டு, கொலை முதலிய கொடிய செய்கைகள் உண்டாதல் நிச்சயம். அப்படியே தனது கணவனுடைய கன்ன கடூரமான சொற்களையும், செய்யத்தகாத செயலையும், அன்றிரவு ஆரம்பம் முதல் கேட்டும் கண்டுமிருந்த நூர்ஜஹானின் மனதில் எழுந்த கோபமும் பொறாமையும் ஒரு சண்டமாருதத்திற்கு இணயாக இருந்ததென்று கூறுவதும் குன்றக் கூறியதாகும். “மேலும் என்ன நடக்குமோ பாாக்கலாம்” என்று நினைத்து நினைத்து அவள் மிகவும் பாடுபட்டு தம் மனத்தின் நிலைமையை வெளியிற் காட்டாமல் அடக்கிக் கொண்டிருந்தாள். அன்று நிகழ்ந்தவை யாவும் கனவோ அன்றி உண்மையோ என்று ஐயமுற்றாள். அதுகாறும் தன்னிடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/253&oldid=1252371" இலிருந்து மீள்விக்கப்பட்டது