பக்கம்:மேனகா 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மேனகா

முழுதும் தன்மீது திரும்பிவிட, இந்த உலகத்தை அவள் கொடுக்கக் கூடுமாயின், அப்படியே செய்துவிடுவாள். கணவனைத் தண்டிக்க வேண்டுமென்னும் விருப்பத்தை அவள் கொள்ளாவிடினும் அவன் விஷயத்தில் பெரிதும் அருவருப்பும், ஆத்திரமும் அடைந்தாள். உடனே எழுந்து அவனை விடுத்து அப்பாற் போய்விட வேண்டுமென்னும் பதைபதைப்பு மாத்திரம் தோன்றியது. படுத்திருந்தவள் சுருக்கென எழுந்து உட்கார்ந்தாள்.

அதற்குள், முதல் பயத்திலிருந்தும் மன அதிர்ச்சியிலிருந்தும் தெளிவடைந்த நைனா முகம்மது சிறிது துணிவைப் பெற்றான். அவன் தனது சபல புத்தியினாலும் தன்னோடு பழகும் மற்ற புருஷரின் கெட்ட நடத்தையைக் கண்டும் விபச்சாரத்தில் விருப்பம் கொண்டவனாயினும், அவன் தன் மனைவியின் பாண்டித்தியம், புத்திசாலித்தனம், நற்குணம் முதலியவற்றைக் கண்டு அவளிடம் உள்ளார்ந்த அச்சங் கொண்டவன்; செல்வாக்கையுங் கருதி, அவளிடம் பெருத்த மதிப்பும் வைத்திருந்தவன். ஆகையால் அவன் அவளைக் கேவலம் தனக்குள்ளடங்கிய மனைவி தானே என அசட்டை செய்யத் துணியவில்லை. அவள் வெளியிற்போய் தனக்கு எவ்விதமான தீங்கைச் செய்வாளோ, விஷயத்தை அவளுடைய தந்தை அறிவாரானால், அவர் எவ்விதமான துன்பம் இழைப்பாரோ என்றும் பெரிதும் அச்சமும் கவலையும் கொண்டான். அவளால் மேனகா விடுவிக்கப்பட்டுப் போனாள் என்பதை உடனே யூகித்துக்கொண்டான். ஆதலின், மேனகா தன் கணவனிடம் சென்று நிகழ்ந்ததைத் தெரிவிப்பாளாயின் அதனால் தனக்கு எவ்வகையான பொல்லாங்கு சம்பவிக்குமோ என்று ஒரு புறத்தில் கலங்கினான்; மேனகா எங்கு சென்றாள் என்பதை இவளிடம் அறிந்து, மேனகா இன்னமும் தன் வீட்டில் இருந்தால், தன்னைக் காட்டிக் கொடாமலிருக்க நூர்ஜஹான் மூலமாக ஏற்பாடு செய்ய நினைத்ததும் அன்றி, தன் மனைவியின் கோபத்தையும் தணித்து அவளுடைய அன்பைத் திருப்பவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/256&oldid=1250938" இலிருந்து மீள்விக்கப்பட்டது