பக்கம்:மேனகா 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டதும் பொய் விண்டதும் பொய்

245

எவ்வளவோ அருமையாக வளர்த்த என் தந்தை இருந்திருந்து என்னை நல்ல புருஷருக்கு கொடுத்தார் என் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும் நான் அவரிடம் போய் எல்லாவற்றையும் சொல்லுகிறேன்; அவர் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடையட்டும். போய் வருகிறேன். இனி உங்கள் முகத்திலும் விழிப்பேனென்று நினைக்க வேண்டாம்; என்னை விடுங்கள்” என்று கூறித் திமிறிக்கொண்டு எழுந்தாள். அவன் அவளை விடாமல் பிடித்துக்கொண்டு எழுந்து, “சே! என்ன பிடிவாதம் இது? உனக்கு நான் உண்மையில் வஞ்சம் செய்வேன் என்றா நினைத்தாய்? என்ன முட்டாள்தனம் இது! உன் மனதைப் பரீட்சை செய்தேனென்று நான் எவ்வளவு சொல்லியும் நீ நம்பமாட்டேன் என்கிறாயே? உனக்கு என்மீது அந்தரங்கமான காதலிருப்பதாக இதனால் நான் உணர்ந்து விட்டேன். என்னைப் பார்க்கிலும் பாக்கியவான் ஒருவனும் இருக்கமாட்டான். நான் இப்போது அடையும் ஆநந்தத்திற்கு அளவில்லை. அதை வீணாக நீ கெடுக்காதே!” என்று நயந்து கெஞ்சிக் கூத்தாடி அவளை அணைத்து சரச சல்லாபம் செய்யத் தொடங்கினான். அது காறும் தன்னுடைய ஆத்திரத்தை மிகவும் பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்த நூர்ஜஹான் தனது பொறுமையை இழந்து, கோபம் மூட்டப்பட்ட சிங்கத்தைப் போலானாள். மகா ஆத்திரத்தோடும் கம்பீரமாகவும் தனது கணவன்முகத்தைப் பார்த்து, “இது யாரை ஏமாற்றும் வித்தை? நான் ஒன்றையும் அறியாத முட்டாள் என்று மதிக்க வேண்டாம். இதுவரையில் எனக்குத் தெரியாமல் என்னை முட்டாளாக்கிய திலிருந்து, எல்லாவற்றையும் நான் அறிந்த பிறகும் என்னை ஏமாற்ற நினைத்தீர்களா! அது ஒருநாளும் பலிக்காது. இந்த நியாயத்தையும் கச்சேரியில் சொல்லிக் கொள்வோம்” என்று கூறித் தனது முழுபலத்தையும் செலுத்தி அவனை மீறித்தன்னை விடுவித்துக்கொண்டு விரைந்தோடினாள். எதிர்பாராத அந்த அம்பு பாய்ந்ததனால் தளர்வடைந்து சிறிது தயங்கியபின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/263&oldid=1251345" இலிருந்து மீள்விக்கப்பட்டது