பக்கம்:மேனகா 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மேனகா

யிருக்கிறது. நேற்று முதல் இன்னமும் கண்ணைக்கூடத் திறக்கவில்லையாமே! அவன் கதி என்னவாகுமோ தெரிய வில்லையே! நம்மை அங்கே இருக்கவிடமாட்டேனென் கிறார்களே வழியில் போகிறவர்களுக்கு நம்மைப்பார்க்கிலும் அதிகக் கவலைபோலிருக்கிறதே!”

சாமா:- சே! அப்படிச் சொல்லாதே; நாம் அங்கே இல்லாவிட்டாலென்ன? அவர்கள் எவ்வளவு கவலையோடும் உபசாரம் செய்து பார்த்துக்கொள்ளுகிறார்கள் தெரியுமா மணிக் கணக்குப்படி யல்லவா ஒவ்வொரு காரியமும் செய்கிறார்கள். அவனை இப்போது பார்த்துவிட்டே இப்படி நடுங்குகிறாயே, நேற்று சாயுங்காலம் கடற்கரையில் அவன் பயங்கரமாக விழுந்து கிடந்தபோது பார்த்திருந்தால் என்ன சொல்லமாட்டாயோ பாவம் தரை முழுதும் இரத்தம் சிறிய குளத்தைப்போல தேங்கி உறைந்து போய்க் கிடந்தது. வண்டி முழங்காலின் மேல் ஏறிப்போய்விட்டதாம்; அங்கே ஒரு எலும்பு முறிந்து போயிருப்பதாகத் தெரிகிறதாம்; பெரிய டாக்டர்துரை யதனால் தான் மிகவும் பயப்படுகிறாராம். அவன் பிழைத்தால் பழையபடி எழுந்து நடக்க ஒரு மாசத்துக்கு மேலாகும்.

பெரு:- ஹோட்டலில் காப்பி சாப்பிடப் போகிறேனென்று சொல்லிவிட்டுப் போனவன் கடற்கரைக்கு ஏன் போக வேண்டும்! இவன் போகாமல் அங்கே என்ன மகா காரியம் கெட்டுப் போய்விட்டது! பெண்டாட்டி போய்விட்டால், கடற்கரையில் என்ன திண்டாட்டம் வேண்டியிருக்கிறது! இது வரையில் இல்லாத அருமைப் பெண்டாட்டியை இப்போ தென்ன கண்டுவிட்டது.

சாமா:- நான் நேற்றைய தினமே சொன்னேன்; அவனை இப்போது தனிமையில் வெளியில் விடக் கூடாது என்றேன். அது நிஜமாய் முடிந்தது. இதனால் என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/268&oldid=1251350" இலிருந்து மீள்விக்கப்பட்டது