பக்கம்:மேனகா 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

251

நாகைப்பட்டணப் பிரயாணங்கூட வீணாய் நின்றுபோய் விட்டது. நான் வீட்டில் பணத்தை வைத்துவிட்டு வெளியில் போய் தெருத்தெருவாய் அலைந்து தேடிப்பார்த்தேன்; அவன் எங்கும் காணப்படவில்லை. ஒருவேளை கடற்கரைக்குப் போயிருப்பானோ என்று ஒருவித சந்தேகம் உதித்தது. பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரிலுள்ள சந்தின் வழியாக சமுத்திரக் கரைக்குப் போய் மணலில் மூலை முடுக்கெல்லாம் தேடினேன். அதற்குள் ஜனங்கள் கூக்குரல் செய்து கொண்டு பாட்டைக்கு ஓடினர். அது என்னவோ வென்று அஞ்சி நானும் ஒடினேன். ஒடிப் பார்க்கிறேன். இவன் விழுந்துகிடக்கிறான். என்ன செய்கிறது! என் தேகம் அப்படியே பதறிப் போய்விட்டது. நல்ல வேளையாக அங்கே அப்போது ஒரு தனிகருடைய மோட்டார் வண்டி வந்தது. அவர் பவழக் காரத் தெருவில் இருப்பவராம்; அவர் பெயர் முத்தையன் செட்டியாராம்; எங்கேயோ அவசர காரியத்தின்மேல் போனவர், இந்த கோரமான காட்சியைக் கண்டு மனவிரக்கங் கொண்டு, அதில் வராகசாமியையும், என்னையும் வைத்துக்கொண்டு போய் ராயப்பேட்டை வைத்தியசாலையில் விட்டுப்போனார்.

பெரு:- அவர் நல்ல தயாள குணமுள்ள மனிதர் போலிருக்கிறது எல்லாப் பெரிய மனிதர்களும் இப்படி இருக்க மாட்டார்கள். இப்படி எவனாவது விழுந்திருக்கக் கண்டால், அவர்கள் இன்னொரு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள்- என்றாள்.

அப்போது டிக்டிக்கென்ற காலடியோசையுடன் நடையில் வந்த யாரோ ஒருவர் “சாமாவையர்!” என்று கூப்பிட்டார். அந்தக் குரலைக் கேட்ட இவர்கள் மூவரும் திடுக்கிட்டு வாசற் பக்கம் நோக்கினர். அடுத்த நொடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமயசஞ்சீவி அய்யர் உட்புறம் நுழைந்தார். அவருடைய கருடப் பார்வையும் கம்பீரத் தோற்றத்தையும் இராஜவேஷ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/269&oldid=1251351" இலிருந்து மீள்விக்கப்பட்டது