பக்கம்:மேனகா 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

மேனகா

நடையையும் கண்ட அம்மாள்கள் இருவரும் நடுநடுங்கி, எழுந்து நாணிக்கோணி சமையலறைக்குள் புகுந்து மறைந்தனர். சாமாவையர் விரைவாகத் தமது ஆசனத்திலிருந்து எழுந்து, “வாருங்கள் அண்ணா! இப்படி வாருங்கள், ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கையைக் காட்டி நாட்டியமாடி, அவரை கூடத்திற்கு அழைத்து வந்து ஊஞ்சலில் உட்கார வைத்தார்.

போலீஸ்:- உட்காருவது இருக்கட்டும்; எப்போதுந்தான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறோம்; வந்த காரியத்தைப் பார்ப்போம். இந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்? வராகசாமி அய்யங்காரின் அக்காள், தங்கை ஆகிய இருவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லையே?

சாமா:- ஆம்; வேறு ஒருவரும் இல்லை.

போலீஸ்:- அன்றைக்கு ராத்திரி என்ன நடந்தது? அவருடைய தமக்கையை இப்படிக் கூப்பிடும்; அந்த அம்மாளுடைய வாக்குமூலம் வாங்க வேண்டும்-என்றார்.

உடனே சாமாவையர் சமையலறைப்பக்கம் திரும்பி, “பெருந்தேவியம்மா! இப்படி வா. அன்றைக்கு ராத்திரி நடந்ததைச் சொல்” என்றார்.

கதவின் மறைவில் நின்ற பெருந்தேவியம்மாள், “நீதான் சொல்லேன். என் வாயால்தான் வரவேண்டுமா” என்றாள்.

சாமா:- கச்சேரியில் உனக்குப் பதிலாக நான் சாட்சி சொல்ல முடியுமா? நீதான் சொல்ல வேண்டும்; அன்றைக்கு நடந்தது எனக்குத் தெரியுமா? உனக்குத்தானே நேரில் தெரியும்.

பெரு:- அன்று ராத்திரி 7 1/2 மணிக்கு நீயும் வராகசாமியும் ரயிலுக்குப் புறப்பட்டுப் போனபிறகு நாங்கள் மூன்று பேரும் சாப்பிட்டுக் கையலம்பினோம். கோமளம் பாயைப்போட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/270&oldid=1251352" இலிருந்து மீள்விக்கப்பட்டது