பக்கம்:மேனகா 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

மேனகா


பெரு:- நான் சமீபத்தில் நெருங்கிப் பார்க்கவில்லை. முற்றத்தில் நின்றுகொண்டு பெட்டிவண்டியைப் பார்த்தேன். தலைப்பாகை, சட்டை, திருமண் முதலியவற்றுடன் ஒருவர் வண்டியில் இருந்தார். அவர்டிப்டி கலெக்டர் என்றே அப்போது நினைத்தேன். அவர் இல்லாவிட்டால் மேனகா நின்று பேசமாட்டாள் ஆகையால் வந்தவர் அவர்தான் என்று நிச்சயமாக நினைத்தேன்.

போலீஸ்:- அந்தப் பெண் பிறகு இதுவரையில் திரும்பி வர வில்லையா ?

பெரு:- இல்லை.

போலீஸ்:- இதற்கு முன் அவர் பெண்ணை எப்போது இங்கே கொணர்ந்து விட்டார்?

பெரு:- ஒரு வாரத்திற்கு முன்.

போலீஸ்:- அப்படியானால், இவ்வளவு சீக்கிரமாக மறுபடியும் வந்து அழைத்துப் போகக் காரணமென்ன?

பெரு:- அதுதான் எங்களுக்குத் தெரியாமையால் தவிக்கிறோம். அதைப்பற்றி அவரையே கேட்கவேண்டும்; கேட்டு உண்மையை எங்களுக்குத் தெரிவிப்பீர்களானால் உபகாரமா யிருக்கும்- என்றாள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், “சரி; அப்படியே செய் கிறோம்” என்று ஒருவாறு புரளியாகக் கூறிவிட்டு, “சாமாவையரே! இதில் உமக்கென்ன தெரியும்?” என்றார்.

சாமா:- நான் வராகசாமியைக் கொண்டுபோய் ரயிலில் ஏற்றி விட்டுவந்தேன். அப்போது மணி ஒன்பது இருக்கலாம். இங்கே வந்தவுடன் வாசலில் உட்காந்திருந்த பெருந்தேவி யம்மாள் என்னைக் கூப்பிட்டு இப்படி நடந்ததென்ற விவரம் தெரிவித்தாள்; மேனகா கூட தன்னிடம் சொல்லிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/272&oldid=1251354" இலிருந்து மீள்விக்கப்பட்டது