பக்கம்:மேனகா 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

மேனகா

உண்மையில் அவர்களைக்காட்டிலும் இழிவான மனிதரை பூமாதேவி இது காறும் பெற்றிராள். சாம்பசிவம், கனகம்மாள், சாமாவையர் ஆகிய மூவரும் வீராசாமி நாயுடுவின் வீட்டுக்குள்ளிருந்து வந்ததைக் கண்டவுடன் அந்தத் தரகர்கள் புரளி செய்து அவர்களைப் பழிக்கத் தொடங்கினார்கள். அவரவர் மனதிலிருப்பதே அவரவர் வாயிலும் செயலிலும் தோன்றும் என்பதற்கு இணங்க, அந்தப் பெரிய மனிதர்களுக்கு உலகத்திலுள்ள எல்லோரும் கூட்டிக் கொடுக்கும் தரகராய்த் தோன்றினர். அவர்கள் சாம்பசிவம் முதலியோரைக் கண்ணெடுத்தும் பாராமலே சுவரைப்பார்த்து உரத்த குரலில் பேசத்தொடங்கினார்கள். ஆனால், அவர்களது ஒவ்வொரு சொல்லும் கணிர் கணிரென்று இம்மூவர் செவியிலும் பட்டது. என்றாலும், தம்மை ஏன் அப்படிப் பழித்துப் பேசுகிறார்கள் என்று சாம்பசிவம் கேட்பதற்கு வழியின்றி, அந்தச் சோம்பேறிகள் தமக்குள் பேசிக் கொள்வோரைப் போலச் சாமர்த்தியமாகப் பேசினார்கள்.

ஒருவன், “அடே பாப்பான்!” என்றான். இன்னொருவன், “அடே கும்பகோணத்துப் பாப்பான்!” என்றான்.

மூன்றாவது மனிதன், “இல்லேடா! அக்காளே! மாயாண்டிப் பிள்ளையைத் தேட்றாண்டா! அக்காளே இவனுக்கு மக இருப்பாடா! மாயாண்டிப்பிள்ளை தான் ஆண்டவனாச்சே, அந்த ஆண்டவனுக்கு எல்லோரும் குட்டிங்களை இட்டாந்து நிமித்தியம் (நிவேதனம்) பண்ண வாராங்கடா” என்றான். நான்காவது மனிதன், “அக்காளே! இந்த பாப்பார நாயிங்க கெட்டமாதிரி ஒருத்தனுங் கெடல்லேடா! அக்காளே அவுங்க எந்த வேலைக்குமே போவட்டுமே; எல்லோரையும் கெலிச்சுப்புட்றாங்கடா! கள்ளுக் குடிக்கட்டும்; அதை நாம்ப மொந்தை, மொந்தையாகக் குடிச்சா அவங்க மொடா மொடாவா முழுங்கிப்புட்றாங்க, பள்ளிக்கூடத்திலே படிச்சா, அவங்கதான் மொதல்ல தேர்றாங்க. கச்சேரி வேலே செஞ்சா ஒருத்தன் நாலு பேரு வேலையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/312&oldid=1251418" இலிருந்து மீள்விக்கப்பட்டது