பக்கம்:மேனகா 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

மேனகா

மற்றவரும் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டு தெருவின் கடைசியிற் போய் நின்றது. வண்டியை எவ்விடத்திற்கு ஒட்டுவதென்று வண்டிக்காரன் கேட்க, சாமாவையரும் கனகம்மாளும் சிந்தனை செய்யலாயினர். அதற்குள் சாமாவையர், “இப்போது மணி மூன்றிருக்கலாம். நாம் நேராக என்னுடைய வீட்டிற்குப் போவோம். அப்புறம் மற்றதைச் செய்வோம். நீங்கள் வேறு யார் வீட்டிலும் இறங்கவேண்டாம்” என்றார். வேறு இடமில்லாமையால் அவர்கள் அதற்கு இணங்கினார்கள். தொளசிங்கபெருமாள் தெருவிற்கு வண்டியை ஒட்டும்படி சாமாவையர் வண்டிக்காரனிடம் சொல்ல, அவன் அப்படியே வண்டியை நடத்தினான்.

சாம்பசிவமும் கனகம்மாளும் மேலே செய்யவேண்டுவ தென்ன வென்பதைப் பற்றி எண்ணமிடலாயினர். வீராசாமி நாயுடுவின் நாடகக் கம்பெனியின் விவரங்கள், மாயாண்டிப் பிள்ளையின் காரியம் முதலியவற்றை நிச்சயமாக அறிந்துகொண்டு போலீஸில் பதிய வைக்க நினைத்த சாம்பசிவத்தின் சந்தேகம் தீராச் சந்தேகமாய் முடிந்தது. அவர்களுடைய மனக் குழப்பமும் மலையாய்ப் பெருகியது. மாயாண்டிப்பிள்ளையைத் தேடிச் செல்வதா? அப்படியானால் எங்கு தேடிச்செல்வது? ரெங்கூனுக்குப் போவதா, சென்னையிலேயே தேடுவதா என்று ஒன்றன்மேல் ஒன்றாக எண்ணிக்கையற்ற நினைவுகளும், சந்தேகங்களும் மனதில் உதித்தன. முதல்நாட் காலையிலிருந்து அன்னம் தண்ணின்றி ஓயாமல் அலட்டப்பட்டதனால் அவர்களது தேகம் கட்டுக்கடங்காமல் தளர்ந்து போய்விட்டது. மயிர்களெல்லாம் நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. முதல் நாளிரவு துயிலாமையால் கண்கள் அடிக்கடி இருண்டன: மூளை கலங்கியது; அடிக்கடி மயங்கி வண்டிக் கூண்டில் சாய்ந்தனர். முகம் விகாரத் தோற்றம் அடைந்தது. தமக்கு ஏற்பட்ட பலவகையான விபத்துக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நினைத்து நினைத்து அவர்கள் மனது எவ்வித முடிவிற்கும் வரக்கூடாமல் சுழன்றுகொண்டே இருந்தது; அது காறும் மேனகாவின் உறுதியான கற்பையே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/314&oldid=1251422" இலிருந்து மீள்விக்கப்பட்டது