பக்கம்:மேனகா 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

297

வலுவாகக் கொண்டு; அதனால் எத்தகைய மனிதரையும், துன்பங்களையும் பொருட்படுத்தாமல் வந்த அவர்களுக்கு அந்த வலு ஆற்றில் இறங்கிய மண் குதிரையின் வலுவைப்போலத் தோன்றவே, அவர்களுடைய பெருமையும், ஆபத்திலும் ஒடுங்காத மனோதிடமும் சோர்வடைய ஆரம்பித்தன. மேலே எங்கு செல்வது? எதைச் செய்வது? பிழைப்பானோ சாவானோ வென்னும் ஐயந்தோன்றக் கிடக்கும் மருமகப் பிள்ளையைப் பற்றிக் கவலைகொண்டு அவனைப் பிழைப்பிக்க வழிதேடுவதா? அன்றி, காணாமற்போன பெண்ணைத் தேடுவதா? இரண்டு நாட்களுக்குள் தஞ்சாவூர் போய்த் தமது உத்தியோகத்தை ஒப்புக்கொடுத்துவிட்டு அங்கு நடக்கும் விசாரணையைக் கவனிப்பதா என்று எண்ணாதன வெல்லாம் எண்ணி ஏங்கித் தவித்தனர். அவர்கள் இருவரும் வாய்பேசா மெளனிகளாய்க் காணப்படினும் அவர்களது மனமும் தேகமும் எரிமலையின் உட்புறம்போல, எல்லாம் உருகிய நெருப்புக் குழம்பாயிருந்தமையால், தாமே எரிந்து பஸ் மீகரமாய்ப் போய்விடத்தக்க நிலையில் இருந்தனர்.

அவர்களுடைய நிலைமையைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகரித்த வேதனையை அடைந்து சாகுந் தருணத்திலிருந்த குதிரை இடைவழியில் திடீரென்று கீழேவிழுந்து படுத்துவிட்டமையால், ஆங்காங்கு வண்டி அரை நாழிகை, ஒரு நாழிகை நின்று. போயிற்று. அதனால் உள்ளிருந்தோரும் ஒருவர் மேலொருவர் விழுந்து புரண்டு, மொத்துண்டதும், வண்டியின் நிறுத்தங்களும், சாம்பசிவம் கனகம்மாள் இருவரின் யோசனைகளுக்கு முற்றுப் புள்ளிகளாகவும், வியப்புக்குறிகளாகவும் வினாக் குறிகளாகவும் விளங்கின. தம்மைப் பிடித்த சனியன் இன்னமும் ஒழியவில்லையே யென்றும், மேலும் என்னென்ன துன்பங்கள் சம்பவிக்குமோ வென்றும் அவர்களது நெஞ்சம் கலங்கியது. அத்தகைய நிலைமையில் வண்டி மாலை ஐந்தரை மணிக்குச் சாமாவையரின் வீட்டை அடைந்தது; மூவரும் இறங்கி உட்புறம் சென்றனர். சாம்பசிவம் நடைத்திண்ணையில் “உஸ்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/315&oldid=1251423" இலிருந்து மீள்விக்கப்பட்டது