பக்கம்:மேனகா 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மேனகா


“பிராண நாதர் திருவடித் தாமரைகளில் அடியாள் மேனகா தெண்டன் சமர்ப்பித்து எழுதிய விக்ஞாபனம்:-

இவ்விடத்தில் மற்றவர் யாவரும் க்ஷேமம். அவ்விடத்தில் தேவரீருடைய திருமேனியின் க்ஷேம லாபத்தைப் பற்றியும், அக்காள் தங்கை முதலியோரின் க்ஷேமத்தைப் பற்றியும் ஸ்ரீமுகம் தயை செய்தனுப்பப் பிரார்த்திக்கிறேன். தேவரீரை விடுத்துப் பிரிந்திருக்கும் துர்பாக்கியத்தை நான் அடைந்த இந்த ஒருவருஷ காலமாக என் மனம் பட்ட பாட்டைத் தெரிவிப்பதற்கு இந்தச் சிறிய கடிதம் எப்படி இடந்தரப் போகிறது! எத்தனையோ நாட்களுக்கு முன்னமேயே கடிதம் எழுதி அனுப்ப என் மனம் என்னைத் தூண்டியது. கையும் துடித்தது. தேவரீருக்கு என்மீதிருந்த வெறுப்பும், கோபமும் தணியா திருக்கும்போது, மகா பாவியாகிய என்னுடைய எழுத்து கண்ணில் பட்டால் கோபமும் வெறுப்பும் அதிகரிக்குமோ வென்றும், கடிதத்தைப் பிரித்துப் பாராமலே எரித்து விடுவீர்களோ வென்றும் அஞ்சி என் ஆசையை அடக்கிப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். கடைசியில், தேவரீருடைய மனசோடு ஒன்று பட்டுப் பேச அவாக் கொண்டு துடிக்கும் என் மனசை இனி ஒரு நொடியும் தடுக்க வல்லமை அற்றவளாய், இதையனுப்பத் துணிந்தேன். க்ஷமிக்க வேண்டும்.

நான் அங்கிருந்த போது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாழிகையும், இரவிலும், பகலிலும், துயிலிலும், விழிப்பிலும் தேவரீருடைய திருவுள்ளத்திற்கு சந்தோஷ கரமாகவும், இன்ப மூட்டும் விதமாகவும் நடந்து கொள்வதையே பாடமாகப் படித்து, அதையே என்னுடைய ஒயாக் கவலையாகக் கொண்டு, அவ்விஷயத்திலேயே என்னுடைய முழு மனதையும், தேகத்தையும், நான் அர்ப்பணம் செய்து வந்தும், என்னுடைய பொல்லாத வேளையின் பயனாக நான் உங்களுடைய வெறுப்பைப் பெற்றேன். நான் யாதொரு தவறையும் செய்யவில்லை யென்று சொல்லவில்லை. பேதமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/60&oldid=1248127" இலிருந்து மீள்விக்கப்பட்டது