பக்கம்:மேனகா 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மேனகா

எத்தனை நாளைக்குப் பெண்ணைத் தகப்பன் வீட்டில் வைத்துக் கொள்ள முடியும்? - என்றார்.

உடனே வராகசாமி விம்மி விம்மி அழுதவனாய்த் தனது மன வெழுச்சியை அடக்கிக்கொண்டு, “உங்களுக்கு எது சம்மதமோ, அது எனக்கும் சம்மதந்தான், சாமாவே பதில் எழுதட்டும்” என்றான்.

சாமா:- இல்லையப்பா! அவர் உன்னுடைய கையால் பதிலை எதிர்பார்க்கிறார். ஏனென்றால், பின்பு ஒருகால் நீ சண்டை போடுவாயோ என்கிற அச்சம் போலிருக்கிறது. இது பெரிய காரியம். அன்னியனாகிய நான் எழுதினால் அவருக்கு வருத்தம் உண்டாகும். நீயே ஒரு வரி எழுதிவிடு.

பெரு:- வராகசாமி! உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை; கடைசியில் அவர் யார்? உன்னுடைய மாமனார்தானே? மாமனார் தகப்பனாருக்குச் சமானம். இதனால் உனக்கு ஒரு குறையும் வந்து விடாது. நீயே ஒரு வரி எழுதிவிடு.

வராக:- என்னவென்று எழுதுகிறது?

சாமா:- வேறே ஒன்றும் அதிகமாக எழுதவேண்டாம். “விஷயங்கள் ஏதோ கால வித்தியாசத்தால் இப்படி நேர்ந்துவிட்டன. இரு திறத்தாரும் ஒருவர்மேல் ஒருவர் வருத்தம் என்பதையே வைக்காமல் யாவற்றையும் மறந்து விடுவோம். தேவரீர் சாமாவையருக்கு எழுதியது என் மனசுக்கு சம்மதமாயிருக்கிறது. எப்போது தேவரீருக்கு செளகரியமோ அப்போது செளபாக்கியவதி மேனகாவை அழைத்துவந்து விட்டுப் போகலாம். இனி நம்மிரு குடும்பத்தாரும் பாலுந்தேனும் போல இருப்போம் என்பது என்னுடைய மனப்பூர்வமான நம்பிக்கை” என்று எழுது, வேறொன்றும் வேண்டாம்- என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/64&oldid=1248131" இலிருந்து மீள்விக்கப்பட்டது