பக்கம்:மேனகா 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பிடும் கள்ளன்

81

காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் திரும்பி விடுவார். அவருடைய காலை ஒருவன் நன்றாய் வருடிவிட்டால் அவனுக்குக் கணக்குப் பிள்ளை வேலைக்குச் சிபார்சு செய்து விடுவார். பருப்பு ஸாம்பாரை மிக்க மாதுரியமாகச் செய்பவனுக்குப் பட்டா மணியம் வேலை கொடுக்க எழுதி விடுவார். தாம் ஒழுங்காய் வேலை பார்ப்பவர் என்பதைப் பெரிய கலெக்டரிடம் தந்திரமாகக் காட்டிக் கொள்வார். ஆனால், அவருடைய காரியமெல்லாம் ஊழலாகவே இருக்கும். ஆறு மாதங்களுக்கு முன்னர் வந்த தபால்கள் உடைபடாமல் ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். குமாஸ்தாக்கள் எழுதி அவரது கை யெழுத்துக்காக வைத்த அர்ஜிகள் மலையாய்க் குவிந்து கிடக்கும். மேலதிகாரிகளிடமிருந்து ஏதாவதொரு விஷயத் திற்கு மறுமொழி வரவில்லை யென்று குமாஸ்தாவின் மீது சீறி விழுவார். அவன் அவருடைய கையெழுத்திற்கு ஆறுமாதத் திற்கு முன்னரே அனுப்பிவிட்டேன் என்பான். அது தம்மிடம் வரவேயில்லை யென்று அவர் துணியைப்போட்டு தாண்டிச் சத்தியம் செய்துவிடுவார். அந்த குமாஸ்தாவின் மீது விரோதமாக எழுதிவிடுவார். சாம்பசிவஐயங்கார் யாவரையும் முதுகில் அடிப்பார்; தாந்தோனிராயரோ வயிற்றில் அடிப்பார். சாம்பசிவம் பிறர் வீட்டில் தண்ணீர் கூடக் குடித்தறியார். பிறன் பொருளை விஷமாக மதித்தவர், தாந்தோனியோ பிச்சைக்காரனுடைய அரிசி மூட்டை பெரியதா யிருந்தால், அவனுக்கு வருமான வரி போடுவதாய்ப் பயமுறுத்தி, அவனிடம் அவ்வரிசி மூட்டையிலும் ஒரு பங்கு வாங்கி விடுவார். இருவரும் பணச் செலவு செய்வதில் செட்டுக்குணம் உடையவர்களே. சாம்பசிவம் எந்தச் செலவு இன்றியமை யாததோ அதைச் செய்வார். எது அவசியமில்லாததோ அதைச் செய்யமாட்டார். ஆனால், அவருடைய செட்டுத் தனம் கண்ணியத்திற்குக் குறைவு செய்யாதது. தாந்தோனிராயருடைய செட்டுத்தனம் பிறர் மனதில் அருவருப்பை உண்டாக்கக் கூடியது. அவர் வெளியூர்களில் சுற்றுப்பயணம் வரும்போது,மே.கா.:-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/99&oldid=1249176" இலிருந்து மீள்விக்கப்பட்டது