பக்கம்:மேனகா 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

219

ஏற்றி வைக்கிறேன். இவள் பிழைத்தவுடன் உன் கோவில் பெரிய பிரகாரத்தில் அடிப்பிரதக்ஷணம் செய்து வைக்கிறேன்; இந்த ஏழை முகத்தைப் பாரம்மா! எங்கள் இடரை யெல்லாம் நீக்கிவிடம்மா கைநிறையப் பவுன்களாகவே காணிக்கை செலுத்துகிறேன்” என்று ஒவ்வொரு தெய்வமாக விளித்து உருக்கமாகப் பிரார்த்தித்துப் பணிந்தவளாய் உட்கார்ந்திருந்தாள்.

அன்றைக்கு முதல்நாளே வருவதாகச் சொன்ன சாம்பசிவம் என்ன காரணத்தினால் அதுகாறும் வரவில்லை யென்று எண்ணமிடலானாள். ஒருகால் பகற்கொள்ளைப் பாக்கம் நீலகண்ட செட்டியார் நமது ஊரில் இல்லையோ, அல்லது பத்திரம் எழுதிப் பதிவு செய்வதில் தாமதமோ, அல்லது பணத்தின் வருகைக்காக எதிர்பார்த்து அந்த ஊரிலேயே இருக்கிறாரோ: சாம்பசிவம் பணத்தை எடுத்து வரும்போது, கள்வர் அவரைக் கொன்றுவிட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்டிருப்பார்களோ, அல்லது தமது பெருத்த ஆபத்தையும், அவமானத்தையும் பொறுக்க மாட்டாமல் அவர் எங்காகிலும் தற்கொலை செய்துகொண்டாரோ, அல்லது லஞ்சம் வாங்கின குற்றத்திற்காக, தஞ்சை கலெக்டர் துரை, சாம்பசிவத்தை வாரண்டில் பிடித்து சிறைச்சாலையில் அடைத்து விட்டாரோ என்று எண்ணத்தை யெல்லாம் எண்ணி எதையும் நிச்சயமாக அறியமாட்டாமல் குழப்பமடைந்து தணல்மேல் புழுவெனத் தவிக்கிறாள். பாடகர்கள் பலவகையான சங்கதிகள் போட்டுப் பாடிப்பாடித் திரும்பவும் பல்லவிக்கு வருதலைப்போல ஒவ்வொரு விஷயத்தையும் வெங்கடாசலபதி ஸ்தோத்திரத்தில் கொண்டுபோய் முடிப்பாள். இடையில் மேனகா வராகசாமி ஆகிய இருவரைப்பற்றி நினைவு உண்டாகும். மேனகா உயிரோடிருக்கிறாளோ அல்லது மண்ணுலகைத் துறந்து விட்டாளோ; உயிரோடு இருந்தால், புருஷன் வீட்டிற்கு வந்துவிட்டாளோ, அல்லது வேறு எங்கு தவிக்கிறாளோ என்று பலவாறு நினைத்து நினைத்து ஏங்கினாள். இராயப்பேட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/220&oldid=1252395" இலிருந்து மீள்விக்கப்பட்டது