பக்கம்:மேனகா 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

மேனகா

தங்களுக்கு மேன்மேலும் புதிய துன்பங்கள் வந்துகொண்டே இருப்பதை நினைத்து, தமது கதி கடைசியில் எவ்வாறாகுமோ வென்று ஐயமுற்று மனமாழ்கினாள்; பணத்தோடு காணாமற் போன சாம்பசிவத்தைப் பற்றியே பெரிதும் கவலைக் கொண்டாள். உத்தியோகம், செல்வம் முதலிய எல்லாம் ஒழியினும், தனது புத்திரன், நாட்டுப்பெண் முதலியோர் உயிருடனிருப்பதே பெரிய பாக்கியமென்று நினைத்த நினைவில் ஈசுவரன் மண்ணைப் போட்டுவிடுவனோ வென்று நினைத்தாள். முறையே சாம்பசிவம், தங்கம்மாள், மேனகா, வராகசாமி ஆகிய நால்வரைப் பற்றியும் நினைத்துக் கவலை கொண்டு கலங்கி வாய் பேசா ஊமையாய் சுவரோடு சுவராக ஒன்றி உட்கார்ந்திருந்தாள். அவளது நிலைமையைக் கண்ட கிட்டன் மிகவும் அச்சங்கொண்டு, “பாட்டி! பாட்டி! உடம்பு என்ன செய்கிறது?” என்று கேட்டான். அவள் சித்தபிரமை கொண்டவளைப் போலக் கண்களை உருட்டி உருட்டி விழித்து மறுமொழி கூறாமலிருப்பாள். கனகம்மாளே முதலில் இறந்து போய்விடுவாளோ வென்று நினைத்துப் பதறுவான் கிட்டன். கனகம்மாள், தங்கம்மாள் இருவரையும் படுக்க வைத்துவிட்டு, தான் என்ன செய்வதென்பதை நினைத்து அவன் பெரிதும் கலக்கமடைந்து தவிப்பான்; அவ்வூரில் சாம்பசிவத்துக்கு அறிமுகமானவர்களிட மெல்லாம் சென்று தங்களது நிலைமையைத் தெரிவித்து, கடனாகப் பணம் கொடுக்கும்படி கேட்டு வெறுங் கையோடு திரும்பினான். பணம் கிடைக்க வில்லை யென்பதைக் கேட்ட கனகம்மாளது மனக்குழப்பம் பெருங் குழப்பமாயிற்று. தங்கம்மாளோ கண்களைத் திறப்பதும் மூடுவதுமா யிருந்தாள்; மூச்சும் அடிக்கடி பெரு மூச்சாக வந்துகொண்டிருந்தது. முகத்திலும் நல்ல களை உண்டாயிற்று. அவளது முகத்தின் மாறுதல்களை கனகம்மாள் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அம்மாதிரி யான சின்னங்கள் தோன்றுவது கெடுதலென்று டாக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/229&oldid=1252405" இலிருந்து மீள்விக்கப்பட்டது