பக்கம்:மேனகா 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேய்க் கூத்து

241


கோம:- மேனகா இருந்தாலாகிலும் அவர்கள் பட்டணத்துக்கு வருவார்கள். இனிமேல் அவர்கள் இந்த ஊருக்கே வரமாட்டார்கள்.

பெரு:- மேனகா சிங்கப்பூரிலிருக்கிறாளோ, அல்லது கப்பலில் போய்க்கொண்டிருக்கிறாளோ? அவளை இப்போது பார்த்தால் நன்றாயிருக்கும். அவள் துலுக்கச்சியைப்போல துப்படியால் மூடிக்கொண்டிருப்பாள்.

கோம:- (சந்தோஷத்தினால் குதித்து) ஆமடா சாமா! அவளைத் துலுக்கச்சியாக்கினால், என்ன பெயர்வைத்து அவளைக் கூப்பிடுவான்?

பெரு:- அவளுக்கு துடப்பக்கட்டை பீபீ என்று பெயர் வைத்தால், அதுதான் அழகா யிருக்கும்; நைனாமுகம்மதுவின் மேல் விலாசம் உனக்குத் தெரிந்தால், அவனுக்குக் கடிதமெழுதி அவளுக்கு இந்தப் பெயரை வைக்கச் சொல்.

கோம:- ஆமா! அவள் இத்தனை நாள் துலுக்கன் வீட்டில் இருக்கிறாளே; ஆட்டுக்கறி, மாட்டுக்கறி யெல்லாம் தின்று தானே இருப்பாள்!

பெரு:- சந்தேகமென்ன! இத்தனை நாள் அவளுடைய ஜென்மம் கெட்டுப்பாழாய்ப் போயிருக்கும். நானாயிருந்தால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு முதல் நாளே உயிரை விட்டிருப்பேன். அந்த மானங்கெட்ட முண்டை பறையன் வீட்டில் கூட சோறு தின்று விட்டு வந்து விடுவாள்.

கோம:- அவள் இனி மேல் எப்படியாவது போகட்டும். வராகசாமியைப் பிடித்த சனியன் ஒழிந்தது; நமக்குப் பங்களா வந்தது. நல்ல காலமும் பிறக்கப்போகிறது. புதிய நாட்டுப் பெண் வரப்போகிறாள். அவளால் பெருத்த சொத்தும் கிடைக்கப் போகிறது.

மே.கா.II-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/242&oldid=1252418" இலிருந்து மீள்விக்கப்பட்டது