பக்கம்:மேனகா 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

மேனகா

விவரங்களை அறியவும்; இவற்றிலிருந்து, சாமாவையரும், உங்கள் சகோதரிமாரும் இவ்விதமான பொய்க் கடிதங்களைத் தயாரித்துப் பெட்டியில் வைத்துவிட்டு, உங்களுடைய மனைவியை மரைக்காயரிடம் விற்றார்கள் என்பதும், கடைசி வரையில் உங்கள் மனைவி குற்றமற்றவளா யிருந்து காணாமற் போயிருக்கிறாள் என்பதும் நிச்சயமாக விளங்குகின்றன. உங்கள் மனைவி நைனா முகம்மது மரைக்காயர் வீட்டிலிருந்து தப்பித்துக் கொண்டு போனது முதல் கடைசியில் தற்கொலை செய்துகொள்ளப் போனது வரையில், நடந்த விஷயங்க ளெல்லாம் இராயப்பேட்டை வைத்தியசாலையிலுள்ள டாக்டர் துரைஸானிக்கு நன்றாகத் தெரியும்; இந்த விசனகரமான விஷயத்தில், உங்களுக்கு என்னால் எவ்விதமான உதவி தேவையாயிருந்தாலும், அதை நான் சந்தோஷமாகச் செய்யத் தயாராக இருக்கிறேன். தேவையானவற்றிற்கு எழுதுங்கள்.

சஞ்சீவி ஐயர்.

-என்று எழுதப்பட்டிருந்த நீண்ட கடிதத்தை வராகசாமி இரண்டே நிமிஷத்தில் படித்து முடித்தான். அவனது உடம்பும் கைகால்களும் ஆத்திரத்தினாலே வெடவெடவென்று நடுங்கின. அது கனவோ நினைவோ வென்றே சந்தேகம் உண்டாயிற்று. அவன் தனது கண்களை நம்பாமல் அவற்றைத் துடைத்துக்கொண்டு கடிதத்தை இன்னொரு முறை படித்தான். அவனது முகம் உடனே மாறுபட்டது; கண்கள் கோவைப் பழம்போலச்சிவக்க, அவற்றிலிருந்து தீப்பொறியும் இரத்தத் துளியும் தெறித்தன. திக்பிரமை கொண்டான்; அது ஆகாயமோ பூமியோ வென்பது தோன்றவில்லை. மனதில் சண்ட மாருதத்தைக் காட்டிலும் அதிகமான வன்மையுடைய எண்ணிறந்த உணர்ச்சிகள் தோன்றி உலகத்தையே போர்த்தன. ரெளத்திராகாரமான கோபம் பொங்கி யெழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/265&oldid=1252441" இலிருந்து மீள்விக்கப்பட்டது