பக்கம்:மேனகா 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

293

விட்டுக்குள்ளே சேர்த்துக் கொண்டதுமன்றி, எங்களைத் தாறுமாறாகப் பேசி அதட்டுகிறாயா! என்னடா உன் புத்தி இப்படிக் கெட்டுப்போய்விட்டது. இவள் உன்னோடு கூட இருந்து மருந்துதான் போட்டுவிட்டாள். அதனாலே தான் நீ இப்படித் துணிந்து பேசுகிறாய்; தலைகால் தெரியாமல் ஆடுகிறாய்; மரியாதையாக இவர்கள் மூன்றுபேரையும் இந்தப் பங்களாவை விட்டுப் போகச் சொல்லுகிறாயா? இல்லாவிட்டால் நானே செருப்பாலடித்து ஒட்டட்டுமா? நம்முடைய குலமென்ன! கோத்திரமென்ன! நாடக்காரப் பயல் வீட்டில் பலநாள் இருந்து, சோறு தின்று, கட்டிப்புரண்டு விட்டு வந்திருக்கிறவளை மானமுள்ளவள் கையாலும் தொடுவானா? அநியாயமாய் ஜென்மத்தைக் கெடுத்துக் கொண்டாயேடா? போனது போகட்டும், உடனே இவர்களை வெளியில் போகச் சொல்; நீ பிராயச்சித்தம் செய்து கொண்டு விடலாம். இல்லாவிட்டால் புது சம்பந்திகள் பெண் கொடுக்க மாட்டார்கள்” என்று சடசடவென்று புளியம்பழங்களை உதிர்ப்பதைப் போலப் பேசி, கைகால்கன்ள எல்லாம் நீட்டி நீட்டி நாடக மாடினாள்.

அதைக் கேட்ட வராகசாமிக்கு ரெளத்திராகாரமாகக் கோபம் பொங்கி யெழுந்தது. அவனது உடம்பு படபடவென்று துடித்தது. கண்களில் தீப்பொறி பறந்தது. அவன் மிகவும் மூர்க்கங் கொண்டவனாய் உடனே எழுந்து அக்காளது பற்களை உடைத்து விட வேண்டு மென்று நினைத்தான்; தனது கையிலிருந்த கடிதங்களை எடுத்துப் படித்து, இரகசியங்களை யெல்லாம் வெளியிட்டு அவளது இறுமாப்பை அடக்க எண்ணி அதைப் பிரித்தான். அந்தக் குறிப்பை நுட்பமாக உணர்ந்த மேனகா, கட்டிலுக்கருகில் அன்போடு நெருங்கி மற்றவர் செவிகளில் படாவிதமாக இரகசியமாகவும் வணக்கமாகவும் பேசக்தொடங்கி, “கோபம் வேண்டாம்; அக்காளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/294&oldid=1252470" இலிருந்து மீள்விக்கப்பட்டது