பக்கம்:மேனகா 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

மேனகா

அவனுக்கு பலியிடுவதைக்காட்டிலும் அதை உயிருடன் கிணற்றில் தள்ளிவிடுவதே நல்லதென்று நினைத்து நாங்கள் அதற்கு இணங்க மாட்டோமென்று சொல்லிவிட்டோம். இப்போது எங்களுக்கு அந்த மனிதருடைய நினைவு வந்தது. அவனுக்கே பெண்ணைக் கொடுத்துவிட நாங்கள் தீர்மானித் தோம். எங்களுடைய குழந்தை பத்மாவதியை அழைத்து அவளிடம் எஜமானருக்கும் எஜமானியம்மாளுக்கும் வந்துள்ள ஆபத்துக்களை யெல்லாம் விவரமாய்த் தெரிவித்தோம். இருநூறு ரூபாய் இல்லாமையால் எஜமானியம்மாளின் உயிர்போகும் நிலைமையிலிருப்பதையும், அதற்காக நாங்கள் செய்துள்ள கலியாண ஏற்பாட்டையும் அவளிடம் வெளி யிட்டோம்; விவரங்களைக் கேட்ட பத்மாவதி எஜமானியம்மாளின் நிலைமையைப் பற்றி மிகவும் வருந்தினவளாய் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, தான் கிழவனாகிய ஹீராசாமிராவைக் கலியாணம் செய்து கொள்ளுவதாக முழுமனதோடு ஒப்புக்கொண்டாள். உடனே நான் அவனிடம் போய்; முதலிலே எங்களுடைய தீர்மானத்தை வெளியிடாமல், கடனாக இருநூறு ரூபாய் கொடுக்கும்படி கேட்டேன்; அவன் கடன் கொடுக்க முடியாதென்று சொல்லியதன்றி, என் மகளைக் கலியாணம் செய்துகொடுப்ப தானால் உடனே இரு நூறுக்கு நாநூறு ரூபாய் தருவதாயும், கலியாணத்தின்போது இன்னும் ஆயிரம் ரூபாய் தருவதாயும் கூறினான். மேலே பேச்சை வளர்க்காமல், அதற்கு நான் உடனே இணங்கினேன். ரூபாய் நாநூறை வாங்கி உங்களுக்கு ரூபாய் முன்னுறை தந்தி மணியார்டராக அனுப்பி விட்டு மிகுதி நூறு ரூபாயை எஜமானரைத் தேடும் செலவுக்காகக் கையில் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டேன்.”

என்று படித்த மேனகா, மேலே படிக்க மாட்டாமல் அவ்வளவோடு நிறுத்தினாள். ரெங்கராஜுவின் உண்மையான அன்பையும், இரக்கத்தையும், தயாள குணத்தையும், தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/311&oldid=1252487" இலிருந்து மீள்விக்கப்பட்டது