பக்கம்:மேனகா 2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




28 வது அதிகாரம்

கண்டு முதல்


தன்பிறகு மூன்று மாதகாலம் சென்றது. தஞ்சையில் ரயிலடிக்கருகில் ஒரு பெருத்த பங்களா விருந்தது. அது அரைக்கால் மயில் நீள அகலமுள்ள மதில்களால் சூழப்பட் டிருந்தது. தென்னை, கமுகு, மா, பலா, மாதுளை முதலிய தருக்கள் அடர்ந்த சோலையில் மயில்களும், மான்களும், குரங்குகளும் துள்ளி விளையாடின. குயில்கள் ஓயாமல் தமது தீங்குரலைக் கிளப்பி வீணாகானம் செய்து கொண்டிருந்தன. வரிசை வரிசையாக வைத்து அலங்கரிக்கபட்டிருந்த பூந்தொட்டிகளும், இங்கிலீஷ் குரோடன்களும் இரமணீயமாக அமைந்து காண்போர் கண்களையும் மனதையும் குளிர்வித்தன; எங்கும் வெண்கலச் சிலைகளின் வழியாக வெளிப்பட்ட தண்ணீர், மழை பெய்தலைப்போல, புல்லடர்ந்த தலையிலும், பூஞ்செடிகளிலும் தாரை தாரையாக வீழ்ந்து குளிர்ச்சி செய்துகொண்டிருந்தது. பல்லாண்டுகளாக உயர்ந்து வளர்ந்த விழுதுகளை ஆயிரக்கால் மண்டபம் போல விடுத்து கம்பீரமாக நின்ற ஆலமரங்கள் எண்ணிறந்தவை, ஆங்காங்கு நின்று அந்த பங்களாவுக்குள் சூரிய வெப்பம் நுழையாதவாறு தடுத்துக் கொண்டிருந்தன. அந்த ஸ்தலம் ஒரு பெருத்த ரிஷியாசிரமம் போல அமைந்து, அதற்குள் செல்வோரைப் பரவசப்படுத்தி அவர்களது மனதில் பிரம்மானந்தத்தையும் சாந்தியையும் உண்டாக்கியது. அந்த உன்னதமான பங்களாவின் வாசலில் மதிட்சுவரின் இரண்டு பக்கங்களிலும் பளபளவென மின்னிய இரண்டு பித்தளைத் தகடுகள் அடிக்கப்பட்டிருந்தன. வலது

மே.கா.II-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/322&oldid=1252774" இலிருந்து மீள்விக்கப்பட்டது