பக்கம்:மேனகா 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மேனகா

அறிந்தவளாயினும், அதை அவரிடம் தெரிவிக்க அஞ்சி மெளனம் சாதித்தாள். பணமூட்டையைத் தான் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடா தென்று நினைத்து அவள் தனது முகத்தை வேறுபுறத்தில் திருப்பிக்கொண்டாள். அப்போது தனது ஆசனத்தில் ஒழுங்காக அமர்ந்து கால்களை முன்போலக் கீழே தொங்கவிட்டிருந்தாள். பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய சாமாவையருடைய வஸ்திரமும் அந்த பெண்பாவை யின் பட்டுத் துயிலும் உராய்ந்து யோக க்ஷேமம் விசாரித்துக் கொண்டன. அதைக் கண்ட சாமாவையரது தேகம் பரவச மடைந்தது: மெல்ல ஆடியசைந்து அழகுநடை நடந்துவந்து தமது பணமூட்டைக் கருகில் உட்கார்ந்து அதை அதிகமாகப் பரப்பிக்காட்டிய பிறகு அதைக் கட்டிப் பைக்குள் வைத்த பின்னர் உல்லாசமாகச் சாய்ந்துகொண்டார். ஒரு பழத்தை எடுத்துத் தோலை உரிக்கத் தொடங்கியவராய் அந்தப் பெண்மணியுடன் எப்படிப் பேசுவதென்பதைப் பற்றிச் சிந்தனை புரிந்தார். துணிந்து தாமே அவளுடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை யென்று உறுதி செய்துகொண்டார்.

“ஏனம்மா! திருவாரூருக்கு வண்டி எவ்வளவு மணிக்குப் போகிறது?” என்று மிகுந்த அன்பையும் பட்சத்தையும் புகுத்திக் கேட்டுவிட்டு அவள் முகத்திலுண்டாகும் மாறுதல்களை நன்றாகக் கவனித்தார். அந்தத் தாக்கலை எதிர்பார்க்காத மங்கை சிறிது திகைப்பும் நாணமுமடைந்து தனது முகத்தை அப்புறம் திருப்பினாள். ஆனால், அவர் அவளோடு பேசியதைப்பற்றி அவள் ஆயாசமடைந்ததாகத் தோன்றவில்லை; ஒருவகை இன்பமுற்றதாகவே தோன்றியது. அப்புறம் திரும்பிய வண்ணம், தனது அழகிய வாயைத் திறந்து கிளி கொஞ்சுதலைப்போல மொழிந்து, “ஒரு மணிக்குப் போகிறது” என்றாள். அது வீணையின் ஒலியைப்போல விருந்ததன்றி மென்மேலும் பேசும்படி சாமாவையரைத் தூண்டியதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/54&oldid=1251889" இலிருந்து மீள்விக்கப்பட்டது