பக்கம்:மேனகா 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மேனகா

அபசகுனம்” என்று அவரை எச்சரிப்பதைப்போல விருந்தது. சாமாவையர் புன்னகை செய்தவராய் எழுந்து கீழே பார்த்து, “அப்பாடா! எவ்வளவு சுகமாக மூட்டைப் பூச்சி கடிக்கிறது? இந்த எஸ்.ஐ.ஆர். வண்டியே எப்போதும் மூட்டை பூச்சிக்கு பேர்போனது” என்று சொல்லிவிட்டு இன்னும் ஒரு முழம் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டார். அவள் அப்புறம் திரும்பிய முகத்தோடு, “ஆம், ஜனங்கள் தூங்கிவிட்டதால் இறங்க வேண்டிய இடம் தெரியாதல்லவா? அதற்காக கம்பெனியார் இவைகளை நியமித்திருக்கிறார்கள். இவைகளுக்கு நாம் சாப்பாடு போடவேண்டாமா?” என்று தனது நகைப்பையடக்கிக் கொண்டே கூறினாள். அதைக்கேட்ட சாமாவையர் பெரிதும் மகிழ்வடைந்து விழுந்து விழுந்து சிரித்தார். இரண்டு நிமிஷம் மெளனமாக இருந்தார்; பிறகு “ஏனம்மா! இப்படி ராத்திரி காலத்தில் நீ துணைக்காக இன்னும் வேறு மனிதரை அழைத்துக்கொண்டு வரக்கூடாதா! இப்படித் தனிமையில் வரலாமா?” என்று உண்மையான உருக்கத்தோடு கேட்டார். உடனே அம்மடந்தை, “திடீரென்று புறப்பட்டு திருவாரூர் போகவேண்டியிருந்தது. சரியான துணை கிடைக்கவில்லை. அதனாலேதான், நான் வேறு வண்டிகளில் ஏற மனமில்லாமல் இங்கு வந்தேன்; தக்க மனிதரிருக்கும் இடமாகப் பார்த்து ஏறிவிட்டால் பயமில்லை யென்று தனிமையில் வந்தேன்” என்றாள்.

தகாத மனிதராகிய தம்மை, அவள் தக்க மனிதரென்று மதித்திருப்பதாக வெளியிட்டதை யுணர்ந்த ஐயர் பூரித்துப் புளகாங்கிதம் எய்தினார். குனிந்து தமது மார்பையும் உடைகளையும் பார்த்துக் கொண்டார். முதலில், அவளுடன் பேச்சுக்கொடுப்பதே கடினமாய்த் தோன்றியது. ஐந்து நிமிஷத்தில் அவளுடன் மிகவும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுப்போனதை நினைத்து உற்சாகமடைந்து, தாம் பிரிவதற்குள் அந்த நட்பு பழுத்துப் பலனைத் தருமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/56&oldid=1251891" இலிருந்து மீள்விக்கப்பட்டது