பக்கம்:மேரியின் திருமகன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

நன்றின் திருச்சுடரை நானிலத்துக்கு ஏற்றினாள்
தேவன் பிறந்தான், திருக்குமரன் பிறந்தான் -
எங்கள் தெய்வம் பிறந்தது என்று
புள்ளினம் ஆர்த்தன, பூவினம் மலர்ந்தன.
வண்ணப் புறாக்களும் வளைய வந்தன
கழுதைகளும் எருதுகளும் காவல் நின்றன.
மெசியா பிறந்த மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
வான் தூதர் வந்துரைக்க மேய்ப்பரும் வந்தார்
முன்னட்டியில் பொதிந்து கிடந்த முதல்வனை
கண்டு களித்தனர் காணிக்கை செலுத்தினர்

ஞானியர் வருகை

தேவன் பிறந்த சேதி உணர்ந்து
தூரக்கிழக்கிருந்து ஞானியரும் வந்தார்
மெசியா பிறந்தது எங்கென்று வினவினர்
வேந்தனும் வேதம் படித்த மேதையரைக் கேட்டான்
முந்தையர் இறைவாக்கு உரைத்தபடி பார்த்தால்
பெரியோன் பிரான் வந்து பிறக்க
பெத்லகாமிலும் பெரிய ஊர் இல்லை என்றார்
ஞானியரும் பெத்லகாம் நோக்கி புறப்பட்டார்
கள்ள மனத்து ஏரோது கரவாக
கண்டுரைத்துப் போங்களென்று கட்டுரைத்தான்

ஞானியர் வழிபாடு

ஞானியரும் ஆண்டவரைக் கண்டு அடிபணிந்தார்
ஆராதனைக்கு தூபமிட்டார் ஆராரோ பாடினார்