பக்கம்:மேரியின் திருமகன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

ஊசிக்காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையும்
பணக்காரன் சொர்க்கத்துக்கு போவது அரிது
என்றார்

ஒரு நாள் மறைநூல் அறிஞன் ஒருவன்
போதகரே -நானும் பின் தொடர்வேன் என்றான்
நரிகளுக்கு வளைகளுண்டு. குருவிகட்டு கூடுகளுண்டு
மனுமகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை
என்னைப்பின் தொடர்பவன் சிலுவையுடன் வருக
என்றார்

அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
ஓநாய்க் கூட்டத்துக்குள் ஆடுகளை அனுப்புகின்றேன்
புறாக்களைப் போன்று கபடமில்லாது
பாம்புகளைப் போன்று விவேகிகளாக
நடந்து கொள்ளுங்கள். நற்செய்தியை நவிலுங்கள்
பேயை ஓட்டுங்கள் பிணியை நீக்குங்கள்
பயணத்துக்கு பையோ மிதியடியோ கோலோ
மாற்றுடையோ கொண்டு செல்ல வேண்டாம்
உங்களை ஏற்பவன் என்னை ஏற்பான்
என்னை ஏற்பவன் இறைவனை ஏற்கிறான்
இறைவன் உங்கள் இதயத்திலிருந்து பேசுவான்
என் பொருட்டு உங்களைத் துன்புறுத்துவார்கள்
ஆன்மாவைக்கொல்ல முடியாதவர்க்கு அஞ்சவேண்டாம்
அவ்வொருவன் தலைமுடியும் எண்ணப்பட்டுள்ளது
காசுக்கு இரண்டு குருவி விற்றாலும்
இறைவன் விருப்பமின்றி ஒன்றுகூட