பக்கம்:மேரியின் திருமகன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

ஒளியாய் வந்தேன் என்னைப்பின் செல்பவன்
இருளில் நடவான் இடறல்பட மாட்டான்
இந்த உலகுக்கு நான் உயிராய் வந்தேன்
என்னுயிரை தன்னுயிராய் ஏற்றவனுக்கு மரணமில்லை
இந்த உலகுக்கு நான் சத்தியமாய் வந்தேன்
போரும் பிரளயமும் என்னை அழிப்பதில்லை
பொய்யும் பொல்லாப்பும் என்னை வெல்வதில்லை
பூதங்கள் ஐந்தும் தனித்தனியே பிரிந்தாலும்
என் போதனைகளில் ஒரு புள்ளியும் அழியாது
மனுமகனுக்கு மகிமை பெறும் நேரம்வந்துவிட்டது
இப்போது செல்லுகிறேன் விரைவில்வருவேன்
உலகம் முடியும்வரை உங்களோடிருப்பேன் என்றார்
எதிர் பார்த்த மெசியா இவர் தானென்று
மக்கள் ஆரவாரித்தனர் மகிழ்ச்சி கடலாயிற்று
பாவங்களின் விலை தீரும் காலம் வந்தது
பரிசுத்த துணையாளர் இங்கு வருவார்
இறைவனின் தீர்ப்பை அவர் எடுத்துரைப்பார்
நீங்கள் அழுவீர்கள் புலம்புவீர்கன் ஆனாலும்
நான் செல்லுவதே உங்களுக்கு நல்லது
மோயீசன் பாம்பை உயர்த்தியது போன்று
உயர்த்தப்படுவேன் உயிர்த்து எழுவேன்
திருமறையின் முடிவுரையும் அதுவே என்றார்

பேச்சின் ஆழம் புரியாது பேதுற்றனர்
பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு கேட்டனர்
தண்ணீர் குடமெடுத்து ஒருவன் வருவான்