பக்கம்:மேரியின் திருமகன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

மாசற்ற ரத்தத்தை சிந்த வைத்த
மாபாவி தானென்ற குறைபட்டான் யூதாஸ்
உன் கேட்டுக்கு விலை கொடுத்து விட்டோம்
பாவத்துக்கு நீயே பொறுப்பென்று புறக்கணித்தார்
கைக்கூவிக்காசை கைப்பாசிடம் வீசினான்
நாணம் கொன்றதோ நாண்டு கொண்டான்

எருசலேமில் நடந்த கதைக்கு வியந்தபடி
கிளயோயா நண்பருடன் எம்மாவூர் சென்றுகொண்டிருந்தார்
புதியவர் ஒருவர் உடன் நடந்து உரையாடினார்
இறைமகன் என்றுணராது எதிர்வாதம் புரிந்தனர்
ஊர்நெருங்கியது உருக்காட்டி மறைந்தார்
பயணத்துக்கு இறைவன் துணைவருவான் என்றுணர்க
கலிலேயப் பட்டணத்தில் கர்த்தரின் சீடர்
அடைத்த கதவுக்குள் காத்திருந்தார் அப்போது
ஆணி தொளைத்த கரத்தில் விரலிடுவேன்
அல்லது ஐயம் தீராதென்றார் தோமா
உங்களுக்குச் சமாதானம் என்றகுரல் கேட்டது
எதிர்பாராத படிக்கு இறைமகன் தோன்றினார்
தோழனே ஆணியிட்ட துளையிங்கே
உன் விரலெங்கே என்றுவினவினார் தோமாவை
தலைகுனிந்த தோமா தேவனின் தாள்பணிந்தார்
கண்டு விசுவசிக்கின்ற உங்களிலும்
காணாமலே நம்புகின்றவர் பேறுபெற்றோர்
இன்னும் உணரச் சொல்லுகின்றேன் உணர்க
மனுக்குலத்தை மீட்கவந்த மேய்ப்பன் நானே

6