உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மே தினம் 1914-ல் - இரண்டாண்டுகளுக்குப் பிறகு, மே தின 5 இலட்சம் பாட்டாளிகள் விழாவன்று, வந்தனர். பவனி ஜாராட்சி ஒழிக்கப்பட்டுப் பாட்டாளிகள் வெற்றி முரசு கொட்டிய பிறகு, 1917-ல், தங்கு தடையின்றி, மேதின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் மே தின விழா, மேதினி எங்கும் கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், ரஷியா விலே, குதூகலமாகக் கொண்டாடப்படும் முறையே, தனிச்சிறப்புடையது. பல்வேறு தொழில் துறையிலே உள்ளவர்கள், உலகுக்கு, சோவியத் ஆட்சி முறையில் சோவியத்தை விளக்குவதற்காகத் தத்தமது திறமை யைக் காட்டுவர். சோவியத் ரஷ்யாவின் வல்லமை யும் வளமும் விளங்கும் காட்சிகள் அன்று நடைபெறும். பட்டாளமும் பவனி வரும், விமானங்கள் வட்டமிடும். கல்லூரி மாணவர்கள் களிப்புடன் பவனி வருவர் கீதம் கேளிக்கை! ரஷியாவில் மே தினத்துக்கு ஈடான விழா இல்லை என்று கூறலாம், அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்! சோவியத் தலைவர்களின் சொற்பொழிவு கள், உலகுக்குச் சோவியத்தின் சிறப்பை விளக்கிடுவ தாக அமையும். இவ்வாண்டும், மே விமரிசையாகக் கொண்டாடப்பட்டது இவ்வாண்டு மார்ஷல் புடெனி சொற்பொழிவாற்றினார். அணுக்குண்டையும், பணக்குண்டையும் கையில் வைத்துக்கொண்டு மிரட்டும் அமெரிக்கா தயாரிக்கும் புதியதோர் புதிய காதிபத்யம், போர்