உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை. தொடுக்கக்கூடும் என்ற எண்ணம், எங்கும் பரவி வருகிறதல்லவா? அதிலும், சோவியத் ரஷ்யாவின் மீதுதான் அமெரிக்காவின் கண் பாய்கிறது என்பது, வெளிப்படையாகத் தெரிந்த விஷயந்தானே. ஆகவே தான், இவ்வாண்டு மே விழாவிலே பேசிய சோவியத் தலைவர்கள், புதுப்போரை உண்டாக்கும் போக்கைக் கண்டித்ததுடன், தவிர்க்க முடியாத நிலையில் போர் மூண்டுவிடுமானால், சோவியத் அதனைச் சமாளிக்கும் என்பதை விளக்கப் புதிய டாங்கிப் படைகளின் பவனியை, விழா விசேஷங்களில் ஒன்றாய்க் காட்டி னர். மாபெருங்கூட்டம் மாஸ்கோவில்! மார் புடெனி புரவி மீதமர்ந்து வந்தார் விழாவுக்கு. "நிலையாக நிற்கக்கூடிய சமாதானத்துக்காக, ரஷியா போராடி வருகிறது, சர்வதேசங்களுடன் ஒத் துழைக்க விரும்புகிறது. சமய உரிமை கோருகிறது. சோவியத் சர்க்காரின் வெளிநாட்டுக் கொள்கையை, சோவியத் மக்கள் அனைவரும் முழமனதுடன் ஆதரிக் கின்றனர்` என்று முழக்கம் செய்தார். அதாவது, இவ்வாண்டு மேதினத்தை, இன்றைய உலக நிலையில் சோவியத்தின் நிலை எப்படி இருக் கிறது? எம்மாதிரியான போக்கு முறையும் தேவை என்பதை விளக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.. இதே முறையில், ஜிகளுடன் போர் நடத்த மே தினம்- நாஜிசத்தை அழித்தா