உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மே தினம் வேண்டும் என்ற சோவியத் உறுதியைத் தெரிவிக்கப் பயன்பட்டது. 'பட்டினி ! பசி 1 போதுமான உணவு இல்லை! அரசியவிலே உள்ள குழப்பம் ஒழிந்து, குடியரசு ஆட்சி ஓங்க வேண்டும் இம்முறையில் முழக்கமிட்டவண்ணம், ஹாம்பாக் (Hamburk) நகரிலே ஐம்பதினாயிரம் தொழி லாளர்கள் மே தினம் கொண்டாடினர். ஸ்பெயின், பிராங்கோ ஆட்சியை ஒழிக்கும் முழக் கமாகத் திகழ்ந்தது, மே தினம்! பாரிஸ் நகரிலே, மே தினத்தன்று, கூலி உயர வேண்டும், விலைவாசிகள் மக்களை அழுத்துவதாக இருக்கக் கூடாது, இந்தோ சீனாவிலுள்ள அமளி நிலை ஒழியவேண்டும் என்று, இவ்வண்ணம் முழக்க மிட்டனர். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் மே தினத்தன்று, அந்தந்த நாட்டின் பிரத்யேகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசவும், பொதுவாக மக்களின் விடுதலையை பாட்டாளிகளின் வும், மே தினம் : பயன்படுத்தப்படுகிறது. மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனம் எந்தெந்த வகையினவாக உள்ளனவேர், அவைகளை எந்தெந்த முறைகளின் மூலம் முறியடிக்க முடியும், மக்கள் முழு வாழ்வு பெறச்செய்யும் வழி என்ன, என்பதை மக்கள் கூடி யோசிக்கவும், உறுதி பெறவும், உரிமை முழக்க மிடவும், மே தினம் ஓர் வாய்ப்பு! எனவே, திராவிடர் கழகத்தாராகிய நாம் திராவிட நாட்டின்