உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மே தினம் நமது பட்டு, அந்தச் சிந்தனையின் பலனாக அறிவுத் துறை யிலே ஒரு புரட்சி ஏற்பட்டாலொழியப் பொருளா தாரப் புரட்சியினால் மட்டும் புதுவாழ்வு கிடைத்து விடாது என்று நம்புகிறோம். ஆழ்ந்த நம்பிக்கை இது. எனவேதான், நாம்,மனிதன் அடிமைப்பட்ட காரணத் தையும், அந்த அடிமைத்தனம் எப்படி நீக்கப்பட வேண்டும் என்பதையும், பிரசாரத்திலே. முக்கியப் பகுதியாக வைத்துக்கொண்டிருக்கிறோம். மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியமென்பதை யுணர்ந்து, ஐரோப்பாக் கண்டத் திலே, பேரறிவாளர்களான வால்டேர், ரூசோ போன் றோர், அறிவுத்துறைப் புரட்சிக்காக எவ்விதம் பணி யாற்றினரோ, அவ்விதமான பணியினையே நாம் புரிகிறோம். பொதுவாகவே நாம் சிந்தித்தால், இந்தப் பணி யின் அவசியம் நன்கு விளங்கும். உலகிலே உள்ள கஷ்டங்கள், வறுமை, பிணி, வேலையில்லாக் கொடுமை,பாட்டாளி படும் துயரம் முதலியவை, எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு ஏற்ற வசதி இல் லாததால் உண்டானவையோ என்று யோசித்தால், இல்லை என்றே தெரியும் ஆராய்ச்சியாளர்கள் புள்ளி விவரங்களைக்: காட்டியே கூறியிருக்கிறார்கள். இயற்கை தரும் செல்வத்தை வசதியைக் கொண்டு, நாளொன்றுக்குச் சராசரி 2-மணி நேரம் எல்லோரும் வேலை செய்தால், எல்லோரும் வயிறார உண்டு வாழ் லாம் என்று. அவ்வளவு. இயற்கைச் செல்வமும், அதனை மக்களுக்கான உபயோகப் பொருள்களாக் கும் பாட்டாளியின் சக்தியும் உள்ளன. இருந்தும்,