உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மே தினம் பூர்ஷுவா (முதலாளித்துவம்) என்ற தத்து வத்தை விளக்குகின்ற யாரும், அது சுரண்டும் முறை; பிறனுடைய உழைப்பால் வாமும் முறை என்று கூறு வர். நாம் ஆரியம் என்று கூறுவது, இதே நிலையைத் 'தான். சுரண்டும் முறை - தொழிலின் பேரால் அல்ல. மதத்தின் பேரால்-ஜாதியின் பேரால்- பழமையின் பேரால்! புரோலோடேரியன், பாட்டாளி என்று பேசும்போது, நம் கண் முன் தோன்றும் உருவம், உழைத்து உருக்குலைந்து, தன் உழைப்பை வேறு யாராரோ பறித்துக்கொள்ளக் கண்டு பதறி, அதனை மாற்ற முடியாததால் திகைத்துத் தலைமீது ஏ கைவைத் துக்கொண்டிருக்கும் ஏழையின் உருவமே. திராவிடன், அத்தகைய உருவந்தான்! ஆகவே பூர்ஷுவா என்பதற்குப் பதில், நம் நாட்டு நிலையைக் கவனித்து, ஆரியன் என்கிறோம்; புரோலோடேரியன் என்பதற் குப் பதில் திராவிடன் என்கிறோம். வர்க்கப் போராட்டம் என்பதுதான், இங்கு நாம் கூறும் ஆரிய திராவிடப் போராட்டம்! திராவிடன் - ஆரியன் என்று கற்பனைகளில் காலந்தள்ளிக் கடுவிஷத்தைப் பரப்புகிறோம் என்று கருதி நம்மீது காய்பவர்கள், இதனை ஆர அமர. யோசித்துப் பார்க்க வேண்டும். ஆரியம் என்ற கலாச்சாரம், உழைப்புக்கு மதிப்பளிக்காது; உழைப் பாளிகளிடம் ஆசை காட்டியோ அச்சமூட்டியோ, பொருளைப் பறித்துச் சுகப்படுவதற்காக உள்ள முறை இந்த முறை, பெரும்பாலானவர்களின் உழைப்பைக் கொண்டு, ஒரு சிறு கூட்டம் வாழ் வதாக அமைகிறது. இந்தச் சுரண்டும் கூட்டம் வொரு காலத்தில்-ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு ஒரு ஒவ்