உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மே தினம் இதுதானே விதி; இதுதானே சாஸ்திரம்; இதுதானே வேதம்; இதுதானே தெய்வக்கட்டளை! நீ தெய்வத் துக்குக் கட்டுப்பட்டவன்தானே, மகாபக்திமானா யிற்றே! நீ இந்தத் தெய்வக் கட்டளையை மீறலாமா? என்றுதானே பேசுவான்! திகைக்கும் திராவிடன் என்ன பேச முடியும்? அவன் சார்பிலே இருந்து ஒரு காங்கிரஸ்வாதியோ, கம்யூனிஸ்டோ, யார் வேண்டு மானாலும் பேசிப் பார்க்கட்டும் - சுயமரியாதை பாஷை தவிர, வேறு கிடையாதே! உன் 'நீ மகா புரட்டன்! உழைப்பதில்லை, மேனியோ, வாடுவதில்லை! ஏரைத் தொட மறுக் கிறாய்: ஆலையிலே ஆபீசராகவன்றித் தொழிலாளி யாக இருப்பதில்லை; ஆண்டவன் உன்னை உழைக்கப் பிறக்கச் செய்யவில்லை, உயர் ஜாதியாகப் படைத் தான் என்று பேசுகிறாய்! ஆசைகாட்டுகிறாய், மோட் சம் என்று கூறி! பயம் காட்டுகிறாய், நரகம் என்று பேசி ! நான் ஓர் ஏமாளி; எத்தன் பேசுகிறான் என்று அறியாமல் கெட்டேன் இதுவரை! இதோ விழிப்புற் றேன்! இந்தச் சுரண்டலை இனி அனுமதியேன்!* என்றுதானே பேசவேண்டும்? திராவிடர் கழகம், இந்த மனப்போக்கைப் பாட்டாளிகளிடம் ஏற்படச் செய்கிறது. கைலாயத்தை நோக்கும் கண்ணைக் காரல்மார்க்சைப் பார்க்கச் செய்கிறது! அதுபோலவே ஆங்கிலேயனைக் கேட்டால் என்ன சொல்லுவான்? என்ன சொன்னான்? உங்களுக்குள் ஒற்றுமை இல்லை. என்றான். ஏன் இல்லை என்று; திராவிடர் கழகம் மக்- களைக் கேட்கிறது. ஒன்றுபடும் மார்க்கத்தை உரைக் கிறது. வடநாட்டானைக் கேட்டால், அவன் 'தேசி