உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 21 யம்' 'பேசி, இந்தியா ஒன்று என்ற கற்பனையைப்பூசி, மயக்குகிறான். திராவிடர் கழகம் அவனைப் பார்த்து, இந்த வேஷம் வேண்டாம், திராவிட நாடு திராவிட ருக்கே! இங்கு உன் சுரண்டல் வேலை நடக்க இனி அனுமதியோம் என்று கூறுகிறது. ஆக, இவ்வளவுக் கும் அர்த்தமும் அவசியம் இருக்கிறது. மற்றவர்கள் அலட்சியப்படுத்திவிட்டபடியால், இவைகளை எடுத்துக்கூறும் பொறுப்பு நமக்கு அதிகமாகிவிட்டது. எனவே அடுத்த ஆண்டு முதல், மே தினம், திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வமான விழா நாளாக் வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இம்சைக்கு ஆளான திராவிடனுக்கு, மதத்தின் பேரால் புகுத்தப் பட்டுள்ள ஆசையையும், அச்சத்தையும் அகற்றியாக வேண்டியவர்களாய் நாம் இருக்கிறோம். எனவே தான், திராவிடன் நம்பிக்கொண்டிருக்கும் மதம், எவ்வளவு நகைப்புக்கிடமானது என்பதை எடுத்துக் காட்டுகிறோம்: நையாண்டி செய்கிறோம்; ஆனால் நியாயத்தின் சார்பிலே நின்று பேசுகிறோம். ஏசு எமக்காகச் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தினார் என்று பேசும்-கிறிஸ்தவர்கள் மன திலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும், எங்கள் கடவுளாம் கோபாலகிருஷ்ணர், கோபிகையர் நீர் விளையாடுகையில் அவர்தம் சேலைகளைக் கவர்ந்து சென்றார் -- குழலும் ஊதினார் என்று பேசும் திராவிட ருடைய மனதிலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும் ஒப்பிட்டுக்காட்டி, மதம் இங்கு எவ்வளவு கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது பாரீர், என்று காட்டு கிறோம்.