உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 23. கிறபடியால், அதிகார பலமும் கிடைத்திருக்கிறது. தேசியம், வெற்றிக் களையுடன், வீரத்துடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள நேரம். வெற்றி வெறியாக மாறும் அளவு, பலம் இருக்கிறது. எனவேதான் மற்றவர் களின் கிளர்ச்சியைத் துளியும் கவலையின்றிக் காலின் கீழ் போட்டுத் துவைக்கிறது -- துவைத்தது சரி என்று கூறுகிறது - மக்களையும் கூற வைக்கிறது. எல்லா இடங்களிலேயும் தேசிய ஆட்சி - எல்லா இடங்களிலே யும் தொழிலாளர்களின் கிளர்ச்சி ! கிளர்ச்சி செய் பவர்களின் கதி ? வேலூர்ச் சிறை! தலைமறைவு! தடை உத்திரவு! கப்சிப் தர்பார் ! கம்யூனிஸ்டுகள் விஷயம் ஒருவாறு முடிந்தது; இனிக் கறுப்புச் சட்டைக்காரர்களைக் கவனிக்க வேண்டியதுதான் என்று, தேசிய ஆட்சியாளர்கள் பேசுகின்றனராம். அவர்களா பேசுகிறார்கள்? பாசீ சம் பேசுகிறது அ அதிகாரம் பேசுகிறது!. ஆணவம் பேசுகிறது ! ஆணவம் பேசுகிறது என்றேன்-ஆண வத்தைப் பேசவைக்கிறது. அழிவுச்சக்தி! தாராளமாகக் கவனிக்கட்டும். பாட்டாளிகளின் விடுதலை விழாவான மே தினத்தன்று நான் என் கட்சியின் சார்பில் கூறுகிறேன். சர்க்கார் தாராள மாகக் கவனிக்கட்டும் - புதிய சிறைச்சாலைகள் கட்டு வதற்கான திட்டங்களும் தீட்டட்டும். பாபம்! அவர் களுக்கும் ஆசை இருக்குமல்லவா! அணைக்கட்டு, பல்கலைக் கழகம், தொழிற்சாலை, புதுப்பாதை, நல்லபாலம் - இப்படிப்பட்டவைகளைக் கட்டமுடியா விட்டாலும், எங்களை அடைத்து வைக்கப் புதுச்சிறை களையாவது கட்டி ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்