உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மே தினம் டும் ! திராவிட கழகம் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறது !144 என்ற முள்வேலி போட்டு அதற்குள் எங்களை உலவச் செய்வதைவிட, சிறைக்குள் தள்ளு வது மேல்! அதைச் செய்யுமுன் அவர்கள் யோசிக்க வேண்டும். சிறைக்குள் தள்ளிக் கிளர்ச்சியை அடக்கிய எந்த வல்லரசாவது வரலாற்றிலே உண்டா என்பது பற்றி. பாசீசத்தின் முதல் அடி, பயங்கரமானதாகத் தான் இருக்கும் - ஆனால் அதன் வீழ்ச்சி, எதிர் பாராத நேரத்தில் இருக்கும். சரியும் திடீரென்று! சடசடெனச் சரிந்ததுபார் ஜாரின் ஆட்சி! என்றார் கவி. நாம் படித்திருக்கிறோம் - நம்மை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்களும் அதனைப் படித்திருக்கிறார்கள். பிரசாரபலம், அதிகாரபலம் இரண்டும் இருக்கும் காரணத்திலே தான், வேலை நிறுத்தங்கள் ஒவ்வொன் றின் போதும், ஆளவந்தார்கள் முதலாளிகளின் முன் னோடும் பிள்ளைகளாகிப் பாட்டாளியை அடக்கு கிறார்கள். தொழிலாளிக்குத் தடியடி, கண்ணீர்க் குண்டு. துப்பாக்கி, சகலமும் நடக்கிறது. கூண்டோடு பிடித்தாயிற்று கம்யூனிஸ்டுகளை காங்கிரஸ் நாராயண சாமிக்கும் அதே கதி ! தேசிய முரசு கொட்டுகிறார் முத்துசாமி வல்லத்தரசு. அவருக்கும் அன்பழைப்பு, வா ஜெயிலுக்கு' என்று, ஏன் ? அவர்கள் ஏதோ உழவர்களின் உரிமைக்காகக் கொஞ்சம் உரத்த குரலிலே பேசிவிட்டனர் என்பதற்காக ! உரத்த குர லிருந்தால், ஊரெங்கும் சென்று, கருப்புச் சிவப்புச் சட்டைகளைக் கண்டிக்க வேண்டுமே தவிர, உ