உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 25 உழவனுக்குப் பரிந்து பேசுவதா? என்று தேசியம் அவர்களை நோக்கிக் கேட்கிறது. அவர்கள் சிறையில் இருந்தபோது,என்ன சிந்தித்தனர்? நாம் அறியோம்! ஆனால் ஒன்று தெளிவு : ஜனநாயக உணர்ச்சியை அடக்குமுறை கொண்டு ஒழித்துவிட முடியாது. அந்த ஜனநாயக உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால்-பலப் பட வேண்டுமானால், நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் வேண்டும். பழைமையின் பிடிப்பிலிருந்து விலகும் நோக்கம் இருக்கவேண்டும். இதற்குத்தான் நாம் அறிவுத்துறையிலே புரட்சி ஏற்பட்டாக வேண்டு மென்று கூறுகிறோம். மே தினச் செய்தி, பாட்டாளி களின் விடுதலைச் செய்தி ! அந்த விடுதலை, பொரு ளாதாரத் துறையினது மட்டுமல்ல- அறிவுத்துறையி லேயும் விடுதலை வேண்டும். ஒன்றுக்காக மற் றொன்றை விட்டுவிடுவதோ, மட்டமாக மதிப்பிடு வதோ ஆகாது என்று கூறுவதோ அவசியமல்ல. இரண்டும் தேவை - இருநோக்கமும் கொண்டதே, திராவிடர் கழகம். பாட்டாளிகளின் விடுதலைத் தினமாகப் பாரெங்கும் கொண்டாடப்படும் இந்த மே தினத்தன்று, நாம் திராவிட நாடு திராவிடருக்கே என்று கூறுகிறோம். இது உலகம் உழைப்பாளிகளுக்கே என்ற முழக்கம் போன்றதே! குறிச்சொல் மட்டுமே வேறு,குறிக்கோள் ஒன்றுதான். உலகம், உழைப்பாளி களுக்கே உலுத்தர்களுக்கு அல்ல! பிறர் உழைப்பை உண்டு கொழுப்போருக்கு அல்ல! சுரண்டி வோருக்கு அல்ல! முதலாளித்துவத்துக்கு அல்ல. ஆம்! அதே பொருளில்தான், திராவிடநாடு, திராவிடருக்கு, ஆரியருக்கு அல்ல; அண்டிப்பிழைக்க வாழு