உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மே தினம் நான் கூறுகிறேன். இந்தப் பொது உடைமைவாதி களுக்கு உண்மையிலேயே முதலாளி யார் என்பது தெரியவில்லை, புரியவில்லை, சரிவரத் தெரிந்து புரிந்து கொள்ள மனமில்லை. பணக்காரன் தான் முதலாளி என்று அவர்கள் தவறாகக் கருதுகின்றனர். பணக்காரனுக்கும் முதலாளிக்கும் உள்ள பேதத்தை அவர்கள் அறியவில்லை. பணக்காரன் முதலாளி அல்ல. எப்படியெனில், பங்களா வைத்திருப்பவன் பங்களாக்காரன், ரிக்ஷா இழுப்பவன் ரிக்ஷாக்காரன், கூலி வேலை செய்பவன் கூலிக்காரன், கடை வைத் திருப்பவன் கடைக்காரன், அது போலவே வைத்திருப்பவன் பணக்காரன் ஆகிறான், அழைக்கப் படுகிறான். நான் பணம் மறுமுறையும் கூறுகிறேன், பணக்காரன் முதலாளி அல்ல என்று. பணக்காரன் யார் என்று பார்ப்போம். குடந்தையில் ஒருவர் பணக்காரராய் இருப்பார். ஐந்தாம் மைலில் அவரைவிடப் பெரிய பணக்காரர் இருப்பார். அதற்குமேல் நண்பர் நாடி முத்து இருப்பார். அதற்குமேல் இராஜா சர். இருப் பார். அவரைவிட வடநாட்டு பிர்லா. அதற்குமேல் தலால். அதைவிட் டாட்டா என்று போகும். அதை யும் கடந்தால் ஆங்கில நாட்டில் பல பணக்காரர்கள் இருப்பர். ஆனால், அவர்களைவிட, அவர்களுக்கு கடன் தரும் அமெரிக்கர் அதிகப் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் மேல் மற்றொரு பணக்காரர் இருக்கிறார். இன்று வண்டியோட்டி அதனால் வண்டிக்காரன். நாளைக் கிண்டிப் பந்தயத் தில் அல்லது பகுத்தறிவுப் போட்டிப் பந்தயத்தில் ரூ6000 அதிர்ஷ்டம் அடிக்கும். அப்போது அவன்