உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே தினம். இத்தனை விதங்களிலே பணம் போகிறதே! இது மக்களுக்குத் தெரியவில்லையா? அடாதது என் அறிய வில்லையா? ஏன் என்று எவரும் கேட்கவில்லை, அன்று முதல் இன்று வரை. காரணம் என்ன? மக்கள் மனத்தில் இவை மடமை என்று படாதது, தோன் றாதது, கருத்தில் கண்மூடி வழக்கம் ஆகியவையே என்று கூறலாம் துணிந்து. வர்ணாச்சிரம தர்மம் வேண்டும் என்று பேசு கின்றனரே இந்தாளும்! வகையான மார்க்கமா அது? ஒரு குலம், அதனை உறிஞ்சப் பிறிதொரு என்ற நியதி நியாயமா? மற்றவர் மாடென ழைக்கும்போது ஒருசிலர் மட்டும் உட்கார்ந்து ல்லாசமாகக் காலம் தள்ள வேண்டுமா? இது வேதன் 'விதியா?'நாதன் கட்டளையா? நயவஞ்சக சூழ்ச்சியா? நவிலுங்கள்! பாடுபடுவதற்குப் பரமன் கட்டளை வேண்டுமா? வேண்டாம், பலரும் பாடுபட்டுத்தான் ஆகவேண்டும், பாங்கான வாழ்க்கை நடத்த. ஆனால், இந்த வேதன் விதி ஒரு பெரிய சதி: நாதன் கட்டளை. நாணயமற்ற செய்கை. ஏன் ஒரு குலம் மட்டும்பாடுபட வேதன் விதி யில்லை? ஏன் அவர்களையும் உழைப்பாளிகளாக்க உரமில்லை அந்த உத்தமனுக்கு (கடவுளுக்கு).. ஒருவனைப் பிறப்பால் உயர்ந்தவனாகவும், உல்லாசி யாகவும், குருவாகவும் படைத்து; மற்றவனைத் ப தாழ்ந்தவனாகவும், உழைப்பாளனாகவும், யாகவும் அமைக்கிறார். அந்த ஆண்டவன். எல்லோரையும் தன் குழந்தைகள் எனக் கருதும் ஆண்டவன் செயலாக அமையுமா இது? எப்படி? அடிமை