உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை ஒரே ஆண்டவன், ஒருவனை வேதமோதுவனாகவும், மற்றவனை அவன் திருவடி தொழுபவனாகவுமா படைப்பார்? அவருக்கு அறிவில்லையா? : அன்பில் லையா? அறம் அறியாரா அவர்? அத்தகைய ஆண்ட வன் உண்மையில் இருந்தால் அதைவிட நயவஞ்சகப் பொருள் இந்த அகில உலகிலும் இல்லை; இருக்க முடியாது வேதன் விதி என்றும் நாதன் கட்டளை யென்றும் பழக்கமென்றும் வழக்கமென்றும் அற்பத்தனங்களை அர்ச்சிக்கிறோமே! இது தகுமா நமக்கு, நம் இன நலனுக்கு? நம்மிடம் பட்டம் இருந்தென்ன? பதவி இருந்தென்ன? செல்வமும் சிறப்பும், அறிவும் ஆற்றலும்,உழைப்பும் ஊதியமும் இருந்தென்ன; பக்குவமிழந்தோம். பராரியானோம், பகுத்தறிவிழந் தோம் பாரிழந்தோம். நாம் எதில் சிறந்திருந்தாலும் மதமெனும் மடமைக்குள் சிக்கி விடுகிறோம். மனி தனைப் பூவேதனாக ஆண்டவன் தூதனாக, அர் சித்து ஆனந்தமடைகிறோம். இத்தகைய இழிநிலைக் குக் காரணம் என்ன? நம்முடைய முன்னோர்கள் மடமைக்கு முதன்மை யளித்து முற்போக்கடையும்படி செய்துவிட்டனர் கபடறியாக் குணத்தினால், வஞ்சகமறியா மனத்தி னால். ஆம்! மன்னர்கள் இதிகாசம் படித்தனர், இனத்தை மறந்தனர், புராணங்கள் கேட்டனர், புரோகிதர்களைப் போற்றினர், மத மகிமையைப் பாடினர், மக்களை மறந்தனர், மடையர்களாகினர், பக்தியால் சித்தங்கலங்கிப் பித்துக்கொண்டனர். இத மே5