உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 " மே தினம் னால் இவர்கள் மட்டுமல்ல, இனமே இழிவுற்றது; எடுப்பார் கைப்பிள்ளையானது. ஏய்ப்போர் ஏறினர் அரியணை!" உழைப்போர் தாழ்ந்தனர் உளப் பண் பற்றதால்! நமது மன்னன் ஒருவன் வரகுணன் என்று நினைக்கின்றேன் காட்டுக்குச் சென்று வேட்டையாடி வீடு திரும்புகின்றான். வழியில் ஓர் குளம். தவளைகள் கரகரவென்று கத்துகின்றன; மன்னன் மகா சிவபக் தன். அவன் காதில் இந்தக் கரகர என்ற சுரக அல்லவா! ஓசை அரகர என்று வீழ்ந்தது. சிவநேசர் உடனே மன்னன் மந்திரிக்கு ஆணையிட்டான், அரண் மனை ஐஸ்வர்யத்தைத் தடாகத்தில் கொண்டுவந்து கொட்டும்படி. ஏன்? குளிரால். வாடுகின்றனராம் சிவனடியார். திருக்கூட்டங்கள், எங்கு? திருக்குளத்தில்! இருக்குமா அவ்விதம்? நடக்குமா அந்தச் செயல்? நடக்கத்தான் முடியுமா? ஆனால், அது பற்றி ஆராய அறிவில்லை அவனுக்கு, ஆண்டவன் அடியார்க்குப் பணி புரிவதே பரமபதமடைய மார்க்கம் என்று கருதி னான்; குளத்தில் மணி அணிகளைப் போட்டான் மன் னன். மதயூகமிருந்தால் செய்வானா இப்படி? மாணிக்கத்தைக் குளத்தில் வாரியிறைக்கும் மதியற்ற மன்னர்கள் வாழ்ந்த இந்த நாடு அழியாமலிருக்குமா? மத மயக்கம் 'அல்லவா இது? தோழர்களே! அறிவியுங்கள். பிறிதொரு மன்னன் கானமயிலாடக் கண்டான். கார்மேகத்தைக் கண்ட களிப்பின் மிகுதியால் கண்ட மன்னன் மயில் குளிரால் வாடுகிறதுஎன நினைத்தான், அளித்தான் அதற்கோர் ஆடை; அதிலும் பட்டுப்