உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை பீதாம்பரம். மன்னர் அவர்; எதுவும் தர முடியும் அவரால். அவரது செயல் கருணையுள்ளதாக. இருக்க லாம். கவைக்குதவுமா? அன்பு மிகுந்ததாகக் காணப் படலாம். ஆனால், அறிவு தொக்கியுளதா அதில்? + ' இந்த வகையிற்றானே இன்று மக்களிடம் உள்ள செல்வம், சிந்தனை, சிறப்பு, யாவும் ஆண்டவனுக்குச் செலவிடப்படுகின்றன? இந்த அகில உலகைப் படைத் தவனுக்குக் கோவில் கட்டுவதிலும், கும்பாபிஷேகம் செய்வதிலும், தங்க ரிஷபம், வெள்ளித் தேர் போன்ற விதவிதமான வாகனங்கள் செய்வதிலும், அவற்றின் வாலறுந்தால், காதறுந்தால், காலொடிந்தால். அவற்றை ஈடுசெய்வதிலுந்தான் இன்று மக்கள் அறிவையும் பணத்தையும் பயன்படுத்துகின்றனர். படிக்கும் மக்கள் ஹாஸ்டல் வசதியற்றிருக்கும்போது, படிக்கப் பள்ளிகளிலே இடமிலாது ஏங்கித் தவிக்கும் போது; பரந்த இந்தத் திருநாட்டின் நிலைமையைப் பாருங்கள்! படிப்பவருக்குத் தங்கியிருக்க ஹாஸ்டல் வசதியில்லை; பணமில்லை புதிதாகக்கட்ட; ஈரமில்லை மக்கள் நெஞ்சில் கொடையளிக்க. ஆனால், ஏட்டில் தீட்டிய ஆரியமுறைப்படி கோயிலிலே பணம் கோடி கோடியாக போய்ச் சேருகிறது. பாடுபட்டும் மக்கள் பஞ்சையாய் வாழும்போது பரமனுக்குப் பல லட்சத் தில் பதக்கங்கள், வாகனங்கள். என்ன அறியாமை மக்களிடம்? மக்கள் மாக்களாக மாறி, மனமுடைந்து, வாழவழியின்றித் திகைக்கின்றனர். ஆனால் மகேஸ்வர பூஜைக்குத் தட்டில்லை. தடங்கலில்லை. காரணம் என்ன? மக்கள் மதத் துறையிலே தவறான கருத்துக் கொண்டிருக்கின்றனர். ஆம்! மக்களை மறந்து மகேஸ்