உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வர மே தினம் 1ர பூஜையை மேலாகப் பாவிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். எவரும் தாழாது தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதுதான் எமது எண்ணம். எதிர் கால வேலைத்திட்டம். குந்தக் குடிசையின்றி, உண்ண உணவின்றி, ணிய ஆடையின்றி, மக்கள் நிர்க்கதியாய் நிலவும் போது ஆண்டவன் பேரால் கோட்டைகள் போன்ற கோயில்களையும், வாகனங்களையும், மண்டபங்களை யும் கட்டுகின்றீரே! இது அந்த அன்புடைய ஆண்ட வனுக்கு, அருள். படைத்த தந்தைக்கு உவந்த செய்லா?இது அறமெனப்படுமா, அன்றி அசட்டுச் சொல் எனப்படுமா என்று ஓர் அரைக்கணம் ஆராயுங் கள் தோழர்களே உம் அறிவைக் கொண்டு! ஆண்டவனுக்குப் பேசும் சக்தியிருந்து அவன் உங்களிடம் பேசுவதானால், அது ஒன்றே ஒன்றாகத் தான். இருக்க முடியும். ஆண்டவன் நயவஞ்சகமற்ற வரானால், அறிவுடைய, அன்புடைய, அறம் மிகுந்த தந்தையரானால் அவர் கேட்பார் உங்களை "அப்பா நான் இந்த உலகை, அண்டசராசரங்களைப் படைவேராசிகளைப் படைத்தேன் நிரைப்படைத்தேன், கடலை படைத்தேன், அதிலே முத்தைப் படைத்தேன், முத் தெடுக்கும் முறையைப் படைத்தேன்; உன்னிடம். அதைத்தடுக்கத் திமிங்கிலத்தைப் படைத்தேன். எதை யும் எண்ணிச்செய்ய, பகுத்துச்செய்ய, பகுத்தறிவைப்