உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைத்ே சி. என். அண்ணாதுரை 69. தேன் உனக்கு. அதன் மூலம் பாராள்வாய், பலரும் வல வாழவகை செய்வாய் என நினைத்தேன். அதைவிட்டு நீ எனக்கு அரை வீசை வெண்பொங்கல் தந்து வரம் வேண்டுகிறாயே! வகையற்ற மூடனே! அறிவைக் கொண்டு ஆவன செய்!'- என்றுதான் கேட்பார். ஆனால், ஆண்டவன் அவ்விதம் கேட்பதில்லை உங்களை. ஏன்? அவர் எப்போதும் பேசினதில்லை. எப்பொழுதும் வெளிப்படையாக, விவேகத்துடன் பேசிப் பழக்கமுமில்லை அவருக்கு. அவர் பேசியிருப்ப தெல்லாம் தம் திருத்தூதர் வாயிலாக, 'சித்தர்கள், ஆச்சாரியர்கள், அந்தணர்கள் வாயிலாகத்தான்; ஒன்றுக்கொ முரண்பட்ட குணங்கள், கூறக் கூசி டும் குடிகாரச் செயல்கள், கடவுளைக் குணமற்ற கயவனாக, கபோதியாகக் காட்டும் கதைகள். இவை தானா மக்களை இன்பபுரிக்கு இழுத்துச் செல்லும் மார்க்கம்? கோயில் உள்ளே சிலை, இடையே திரை, அதன் பின்னே ஐயர். அவர் தயவு வைத்தால் திரை விலகும். தயவுக்குத் தட்சிணை தரவேண்டும். தயாபரனைக் காணவா இத்தனை தடைகள்? என்ன நயவஞ்சகம் பொதுவிடத்தில்? அன்று, ராஸ்புடீன், ஜார் முதலா னோரின் கொடுமைகளுங்கூட மதத்தை முன் வைத்து, ஆண்டவன் ஆணை என்று, அலங்கார ஆர்ப்பாட்டங் கள் செய்துதான் நடந்தேறின; இன்று அதே முறை யில் நம் நாட்டில் நடந்து வருகின்றன. எத்துணை நாள் இந்த இழிநிலை நம்மிடம்?